நெயில் பாலிஷ் பலவிதமான நிறங்களில் விரல் நகத்துக்கு அழகு சேர்ப்பது மட்டுமின்றி, அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன்படுகிறது. வீட்டிலுள்ள பொருட்களை பராமரிப்பதில் நெயில் பாலிஷ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பணத்தை மிச்சப்படுத்துவதுடன், வீண் அலைச்சலையும் தவிர்க்கலாம். எனவே, நெயில் பாலிஷை பயன்படுத்தும் சில வழிமுறைகள் இங்கு தரப்பட்டுள்ளது.
நெயில் பாலிஷ் (Nailpolish)
கவரிங் நகைகள், பித்தளை மற்றும் தாமிர கலைப் பொருட்களின் மீது காற்று படும்போது, அவற்றின் நிறம் கருமையடைய வாய்ப்புள்ளது. எனவே பொலிவிழக்காமல் இருக்க இவற்றின் மீது நேச்சுரல் நிற நெயில் பாலிஷை பூசலாம். இதனால் விலை மலிவான கவரிங் நகைகளை பயன்படுத்தும்போது ஒருசிலருக்கு சருமம் எரிச்சல் உண்டாவதையும் தவிர்க்கலாம்.
கல் வேலைப்பாடுள்ள தோடு, மோதிரங்களை ஓரிரு முறை பயன்படுத்தினாலே ஒரு சிலருக்கு சலிப்பு தட்டும். அப்போது உங்களுக்கு பிடித்தமான நிறங்களை அதில் அடித்து பயன்படுத்தலாம். முத்துகள், பாசிகளின் மேற்புறத்தோல் விரைவில் உதிர்வதால் அவற்றை பயன்படுத்த முடியாது. அதனால் முத்துக்களின் மீது நேச்சுரல் நிற நெயில் பாலிஷை அடிக்கும்போது, பொலிவுடன் நீண்ட நாட்களுக்கு இருக்கும்.
கிச்சன் மற்றும் பாத்ரூம் சுவர்களில் உள்ள டைல்ஸ்கள் எதிர்பாராவிதமாக உடைந்து கீறல் விழும். அந்த கீறலின் மீது அதேநிறத்தில் உள்ள நெயில் பாலிஷ் அடிக்கும்போது அவை மறைந்துவிடும்; உற்றுப்பார்த்தால் மட்டுமே கீறல் கண்களுக்குத் தெரியும்.
ஷூ லேஸ் ஓரங்கள் சீக்கிரம் பிய்ந்து பிசிறு தட்டும். நேச்சுரல் நிற நெயில் பாலிஷை அந்த நுனிகளில் அடித்தால், எளிதில் பிரிந்து போகாமல் இருக்கும். இதேபோல் சட்டைக்கு பட்டன் தைத்த நுாலின் மீது நேச்சுரல் நிற நெயில் பாலிஷை பூசினால், நுால் கெட்டிப்படும். பட்டன் பிய்ந்து போகாது.
பல சாவிகளை ஒன்றாக வைத்திருக்குபோது சரிவர அடையாளம் தெரியாமல், அவசரத்தில் வெவ்வேறு பூட்டுகளில் மாற்றிப் போட்டு லாக்கைத் திறக்க முடியாமல் பலரும் திண்டாடுவர். வெவ்வேறு நிற நெயில் பாலிஷ்களை எடுத்து, பூட்டிலும், சாவியிலும் ஜோடியாக ஒரே நிறத்தில் அடித்து அடையாளம் வைக்கலாம். இதனால், இந்த அடையாளத்தை வைத்து எளிதில் லாக்கை திறக்க முடியும். பரிசாக வரக்கூடிய பர்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள் மீது பெயர் அச்சிடப்பட்டிருக்கும். மெல்லிய காட்டன் துணி அல்லது பஞ்சை நெயில் பாலிஷ் ரிமூவரில் நனைத்து துடைத்தால் எளிதில் அழிந்து விடும்.
காஸ்ட்டிலியான கோல்டன் மற்றும் சில்வர் நிற கட் ஷூக்கள் மீது எதிர்பாராவிதமாக கீறல்கள் ஏற்பட்டால் மீண்டும் பயன்படுத்த பலரும் தயக்கம் காட்டுவர்; அவற்றின் மீது இதே நிறத்திலுள்ள நெயில் பாலிஷை அடித்து வீணாக்காமல் மீண்டும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க
பானி பூரி தண்ணீரால் காலரா பரவல்: தடை விதித்தது நேபாளம்!
பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு நவீன கருவி: கோவை இரயில் நிலையத்தில் அறிமுகம்!
Share your comments