ஆகாய கருடன் கிழங்கு
"ஆகாச கருடன் கிழங்கு" என்ற பெயர்பலருக்கு புதிய சொல்லாகவும், முந்தைய தலைமுறையினருக்கு பரிச்சயப்பட்ட ஒன்றாகவும் இருக்கும். கோவைக் கொடி இனத்தைச் சேர்ந்த இந்த மூலிகைக்கு பேய் சீந்தில், கருடன் கிழங்கு, கொல்லன் கோவை என பல்வேறு பெயர்கள் உள்ளன.
அரை நூற்றாண்டு முன்பு வரை குருவிக்காரர்கள் காடு, காடுகளில் வசிப்பவர்கள் மலைகளுக்குச் சென்று இக்கிழங்கை சேகரித்து கொண்டு வந்து கிராமங்கள், நகரங்கள் என எல்லா இடங்களுக்கும் சென்று விற்பார்கள். மூலிகை காடுகள்,வனங்களில்,மலை சார்ந்த பகுதிகளில் மட்டுமே தன்னிச்சையாக வளரும் கொடி இனமாகும்.
ஆகாயத்தில் பறக்கும் கருடன் போன்ற தோற்றத்தில் இருப்பதால் இதற்கு ஆகாய கருடன் என்னும் பெயரை நம் முன்னோர்கள் சூட்டினார்கள். இம் மூலிகை கிழங்கினை பண்டைய காலங்களில் வீடுகள் தோறும் வாசலில் கட்டி தொங்க விடுவார்கள். பொதுவாக பூமியில் ஊர்ந்து செல்லும் விச ஜந்துக்களான பாம்பு, பூரான் போன்றவகைகள் ஆகாயத்தில் கருடன் பறந்து செல்வதைப் பார்த்தால் அஞ்சி ஒளிந்து கொள்ளும். அதே போல் இந்த கிழங்கை தொங்க விட்டால் கருடன் பறந்து செல்வதாக நினைத்து வீட்டிற்குள் வராது என்று கூறுவார்கள். மேலும் இக்கிழங்கின் வாசனை அவைகளுக்கு ஒவ்வாமை ஏற்படுத்துவதால் அந்த இடத்தை விட்டு உடனே அகன்று விடும்.
"சாகா மூலி" என்ற பெயர் கொண்ட இந்த கிழங்கிற்கு மருத்துவ குணங்களும், சில அமானுஷ்ய சக்திகளும் இருப்பதாக இன்றவும் நம்ப படுகிறது. "சாகா மூலி" என கூற காரணம், இக் கிழங்கை கட்டி தொங்க விட்டால் காற்றில் உள்ள ஈரத்தை மட்டும் உள்வாங்கி உயிர் வாழும் சக்தி கொண்டது. சில சமயங்களில் முளை விட்டு கொடியாகப் படர்ந்து விடும் தன்மை கொண்டது.
வீட்டிற்கு ஏற்படும் திருஷ்டி, தோஷங்களை போக்கும் தன்மை கொண்டதாகவும், எதிரிகளால் ஏவப்படும் பில்லி, சூன்யம், போன்ற மாந்திரீக எதிர் வினைகளை ஈர்த்து தன்னைத் தானே அழித்துக்கொள்ளும் அமானுஷ்ய சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.
சித்தர் பாடல்
அரையாப்பு வெள்ளை யகலாக் கொறுக்கை
கரையாத கட்டியிவை கானார்- வரையிற்
றிருடரெனச் செல்லும்விடஞ் சேர் பாம்பு
கருடன் கிழங்கதனைக் கண்டு.
இதன் பொருள்:இந்தக் கிழங்கு நஞ்சு முறிவிற்கும், நீர்க்கொழுப்புக்கட்டி கரைய , இந்த கிழங்குடன் மல்லிகை மொட்டு சம அளவு கலந்து அரைத்து , காலையில் பசும் பாலில் கலந்து குடித்து வர , விரைவில் கட்டி கரையும். சூலை, பாண்டு ,பலவித நஞ்சுகள், கழிச்சல், கரப்பான், சொறி, மேகநோய், கட்டி தீரும். பாம்பு போன்ற விச பிராணிகளும் அருகில் வராது என கூறியுள்ளனர்.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments