1. வாழ்வும் நலமும்

நீரிழிவு நோயாளிகளின் மாமருந்து வேப்பம்பூ: சேகரித்து பயன்பெறுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Neem Flower

இப்படி பூக்கிற பொழுது முடிந்தவரை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பறித்த வேப்பம் பூக்களை ஓரிரு நாள் நிழலில் காயவைத்து உலர்ந்த பிறகு டப்பாவில் நிரப்பிக் கொள்ளலாம். இந்த வேப்பம்பூ , ஒரிஜினல் மலைத்தேன் , முருங்கைக்கீரை , நாட்டு மாட்டுப் பால் போல அற்புதம் செய்யும் ஒரு மருந்து என்பது தான் இதன் விஷேஷமே.

வேப்பம்பூ (Neem Flower)

வாதம், பித்தம், கபம் என்ற மூன்று நாடி வகையில் ஏதாவது ஒன்று தான் மனிதன் என்று ஆயுர்வேதம் சொல்கிறது. அந்த மூன்று நாடிகளையும் சமன்படுத்துகின்ற பேராற்றல் வேப்பம்பூ ஸ்பெஷல். நாடிகள் சமன் பட்டாலே வியாதிகள் அனைத்தும் ஓடிப்போகும்.

சாலையோரங்களிலும், கிராமப்புறங்களிலும் பங்குனி மாதத்தில் பூத்துக் குலுங்கும் வேப்ப மரத்துப் பூக்கள், அவ்வளமாக பார்வையை கவர்வதில்லை. ஆனால், அந்த வேப்பம்பூவிலிருந்து வெளிக் கிளம்பும் ஒரு வகையான வாசம் மஞ்சளையும், சாணத்தையும் லேசாக தீயிட்டு கருக்கினால் வருமே.. அது போல ஒரு வாசம். அதை நுகராமல் ஒரு வேப்ப மரத்தை தாண்ட முடியாது.

பயன்கள் (Benefits)

கேன்சர் கிருமிகளை கொல்வது, குளிர்ச்சி தருவது, குடற்புண்ணை சரி செய்வது , மன நிம்மதி தருகிறது, பல் சுத்தம், இத்யாதி இதையெல்லாம் தாண்டி "சுகரு" க்கு விஷமாய், எதிரியாய் இருக்கிறது வேப்பம்பூ என்பது இன்னொரு ஸ்பெஷாலிட்டி.

நீரழிவை குணப்படுத்த (To cure Diabetes)

நல்ல ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் வேப்பம்பூவை சாப்பிட்டு வந்தனர் நம் முன்னோர்கள். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்து வேப்பம்பூ. சித்திரை முதல் நாளன்று வாழைப்பழத்தோடு வேப்பம்பூவை சாப்பிட்டால் மிகவும் நல்லது.

இந்த ஆண்டிலிருந்து பயங்கரமான ஆஸ்பத்திரி செலவை எப்படியாவது மல்லுக்கட்டி குறைக்க ஆசைப்படுகிறவர்கள், எல்லாம் வேப்பம்பூ பொக்கிஷத்தை சேகரித்து பத்திரப்படுத்துங்கள்.

மேலும் படிக்க

பற்களில் மஞ்சள் கறையா? போக்குவதற்கு இதைச் செய்யுங்கள்!

எலித் தொல்லை தாங்க முடியலையா? இதை செஞ்சிப் பாருங்க எலியே வராது!

English Summary: Neem flower is a best medicine for Diabetics: Collect and use! Published on: 22 May 2022, 08:17 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.