நெல்லிக்கனி, இதனை நம் புராண காலங்களில் இருந்துக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஏனெனில், ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அத்தனை அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.
எடைக்குறைப்புக்கு நெல்லிக்காய் (Gooseberry for weight loss)
குறிப்பாக பெரும்பாலானோர் எதிர்கொள்ளும் உடல் எடையைக் குறைத்தல், தொப்பையைக் குறைத்தல் உள்ளிட்டவற்றுக்கு, நெல்லிக்காய் பெரிதும் கை கொடுக்கும்.
ஜிம்முக்கு போயி, சில மணி நேரம் உடற்பயிற்சி செய்வது, பிடித்த உணவைச் சாப்பிடாமல், பிடிக்காத உணவைக் கட்டாயம் சாப்பிட்டு,டயட்டை மெயின்டைன் பண்ணி, அப்பப்பா இத்தனை மெனக்கிடல்கள்,,, இவை அத்தனைக்கும் ஒரே தீர்வுதான் நெல்லிக்காய்.
8 விதமாக (In 8 ways)
நெல்லிக்காயை இப்படி 8 விதமாக சாப்பிட்டு வந்தால்,தொப்பை மற்றும் உடல் எடையை ஒரே மாதத்தில் குறைத்துவிட முடியும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து போன்றவை உடலில் உள்ள அழுக்குகளை நீக்கி, கொழுப்புகளை வெளியேற்றுகிறது.
நெல்லி முரப்பா (Nelly Murappa)
இஞ்சி முரப்பாவைப் போலதான் நெல்லிக்காய் முரப்பாவும். இஞ்சி மற்றும் நெல்லிக்காயைச் சேர்த்து செய்யும் கலவை தான் நெல்லிக்காய் முரப்பா.
இதனை தினமும் 1 துண்டு சாப்பிட்டு வந்தால் உடல் எடையை சட்டென குறைத்து விடலாம்.
நெல்லி தேனீர் (Nelly tea)
ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
வெல்லம் 1 ஸ்பூன்
தயாரிப்பு முறை (Preparation)
முதலில் 1 கப் நீரைக் கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லிப் பொடியைச் சேர்த்துக் கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.
இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்துக் குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.
நெல்லி மிட்டாய்
நெல்லிக்காயை மிட்டாய் போன்றும் சாப்பிடலாம். வெல்லம் சேர்த்து இதுத் தயாரிக்கப்படுவதால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்காது. உடலை எடையைக் குறைக்க நெல்லி மிட்டாய் சிறந்த தேர்வு.
நெல்லிக்காய் ஊறுகாய் (Gooseberry Pickle)
தினமும் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஊறுகாயை உணவில் சேர்த்து சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மிக முக்கியமாக உடல் எடை, தொப்பைப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிடும்.
நெல்லிப் பொடி
நெல்லிக்காயை அரிந்து அதனை வெயிலில் உலர வைத்துப் பொடியாக அரைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை தினமும் 1 ஸ்பூன் அளவு நீரிலோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறைப்பிற்கு உதவும்.
நெல்லிச் சட்னி
நெல்லிக்காய் சட்னியை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடாமல் பார்த்து கொள்ளலாம்.
தயாரிக்க
-
பூண்டு 2 பற்கள்
-
கொத்தமல்லி விதைகள் 1 ஸ்பூன்
-
பச்சை மிளகாய் 1
-
கருவேப்பில்லை சிறிது
-
எண்ணெய் 2 ஸ்பூன்
செய்முறை (Preparation)
முதலில் எண்ணெயை ஊற்றி சிறிது நேரம் காய விட்டு அதன் பின்னர் அதில் பூண்டு, கொத்தமல்லி விதை, பச்சை மிளகாய், கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்க்கவும்.
இதனை 5 நிமிடம் நன்றாக வதக்கி அதன் பின் ஆறவிட்டு அரைத்துக் கொள்ளவும். பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைத்துப் பரிமாறலாம்.
நெல்லிச்சாறு
இதனைச் சாறு போன்று தினமும் 1 கிளாஸ் அளவு குடித்து வந்தால் தொப்பை முதல் செரிமான கோளாறுகள் வரை தீர்வு பெற முடியும்.
மேலும் படிக்க...
சருமப் பிரச்சனை தீர Milk water bathபாத் தான் பெஸ்ட்- விபரம் உள்ளே!
Share your comments