1. வாழ்வும் நலமும்

புதிய வகை கொரோனா வைரஸ் -இஸ்ரேலில் கண்டுபிடிப்பு?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
- discovered in Israel?

பலவிதமாக உருமாறி கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், தற்போது, இஸ்ரேல் நாட்டில் மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடரும் பாதிப்பு (Continuing vulnerability)

பலவிதமாக உருமாறி கொரோனா வைரஸ், உலக நாடுகளை உலுக்கி வரும் நிலையில், தற்போது, இஸ்ரேல் நாட்டில் மேலும் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 2022-ம் ஆண்டு தொடங்கிய நிலையிலும் முடிவுக்கு வரவில்லை. தொடரும் இந்தத் தொற்றுப் பாதிப்பு, காரணமாக மக்கள் மனஅளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றங்களை அடைந்து டெல்டா, ஆல்பா, டெல்டா பிளஸ் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் பரவி வருகிறது. தற்போது ஒமிக்ரான் என்ற உருமாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவி வருகிறது.

ப்ளோரனா (Florana)

இந்நிலையில், இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ப்ளோரனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய வைரஸ் இஸ்ரேலில் ஒருநபருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ், ப்ளூவென்சா தொற்று ஆகிய 2 தொற்றுகள் சேர்ந்து ப்ளோரனா என பெயரில் புதிய தொற்று உறுதியாகியுள்ளது.
பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு இந்த ப்ளோரனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ப்ளுவன்சா (Influenza)

கொரோனா வைரஸ் தொற்றுடன் இன்ப்ளுவன்சா என்ற வைரசும் இணைந்து இந்த ப்ளரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த இன்ப்ளுவன்சா தொற்றுக்கு காய்ச்சல், சளி, தசைவலி, இருமல், நெரிசல், மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் சோர்வு ஆகியவை அறிகுறிகளாகும்.

தாக்கினால் என்னவாகும்? (What if attacked?)

இது கொரோனா வைரசுடன் சேர்ந்து கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றால் நிமோனியா ஏற்படலாம். மேலும், சில நேரங்களில் மரணமும் ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் புதிய ப்ளரோனா வைரஸ் தொற்று குறித்து விஞ்ஞானிகள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க...

உடல் ஆரோக்கியமே முக்கியம்- ஈஷா வழங்கும் புத்தாண்டுப் பரிசு!

சிலிண்டர் வைத்திருப்போருக்கு 50லட்சம் வரை காப்பீடு

English Summary: New type of corona virus - discovered in Israel? Published on: 01 January 2022, 11:05 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.