காயம் அல்லது அதிர்ச்சி உடல் பருமன், நீண்ட நேரம் உக்காந்து இருப்பது, நீண்ட நேர பயணம், மன அழுத்தம், கடுமையான உடற்பயிற்சி மற்றும் சமூக பொருளாதார நிலை ஆகிய காரணங்களால் முதுகு வலி ஏற்படுகிறது. முதுகு வலி ஒரு நோய் அல்ல அனால் உடலில் ஏற்படும் அறிகுறிகளாகும்.
முதுகு வலி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது வட்டு இரக்கம், நரம்பு வேர் சுருக்கம், முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, முதுகெலும்பு முறிவு, எலும்பு சிதைவு, கீல்வாதம் ஆகிய வற்றும் காரணமாக முதுகின் கீழ் பகுதியில் வலி ஏற்படுகிறது.
சிலருக்கு கட்டுப்படுத்த முடியாத முதுகு வலி மற்றும் வெறும் களுடன் நாடாகும் பொது குத்துவது போன்ற உணர்வு,மற்றும் நீண்ட நாள் படுக்கையில் இருப்பதால் ஏற்படும் முதுகுவலி பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை அவசியமில்லை. அவர்களின் முதுகு வலி, உடம்பு வலி ஆகிய பிரச்சனைகளை குணப்படுத்த முறையான மருத்துவம், சரியான வலி நிவாரண மருந்துகள், ஆகியவற்றை கடைபிடித்து, குணப்படுத்த முடியும்.இதற்காக அறுவை சிகிச்சை தேவையில்லை.
முதுகெலும்பு உறுதியற்ற தன்மை, கால்கள் அல்லது காலில் பலவீனம், மலசிக்கல் பிரச்சனை, சிறுநீர் மற்றும் மலம் அடங்காமை, முதுகெலும்பு முறிவு ஏற்பட்ட நபர்கள் மட்டுமே அறுவைசிகிச்சையை நாடுகிறார்கள்.
எனவே பாதிக்கப்பட்ட 10 பேரில் 9 பேருக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. அவர்களுக்கு வலி நிவராணிகளும் உடற்பயிற்சியும் போதும்.
மேலும் படிக்க:
Share your comments