தமிழக அரசு ஊழியர்கள் பல காலமாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் எடுக்கும் முடிவே இறுதியானது என நிதியமைச்சர் கைகழுவிவிட்டார்.
பழைய ஓய்வூதிய திட்டம்
2003ஆம் ஆண்டு வரை அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலில் இருந்தது. பின்னர் 2004ஆம் ஆண்டு முதல் சிபிஎஸ் எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்தான் நடைமுறையில் உள்ளது.
தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கையாக உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள நமது பணத்தில் தேவைப்படும்போது கடனாக பெற்றுக்கொள்ளலாம். அந்தக் கடனுக்கு வட்டி கிடையாது.
பென்சன்
பணி ஓய்வுபெற்ற பிறகு, நாம் கடைசியாக வாங்கிய ஊதியத்தில் 50% தொகை பென்சனாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் நமக்கு பணத்தை கொடுத்துவிட்டார்கள் என்றால் பின்னர் எதுவும் கிடைக்காது
குடும்ப பென்சன்
ஓய்வூதியதாரர் இறந்துவிட்டால் அவரது கணவன் அல்லது மனைவிக்கு ஓய்வூதியத்தில் 50% தொகை தொடர்ந்து பென்சனாக வழங்கப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் விருப்ப ஓய்வூதியத் திட்டம், இயலாமை ஓய்வூதியம், கட்டாய ஓய்வூதியம், கருணை ஓய்வூதியம், ஈடுகட்டும் ஓய்வூதியம் ஆகியவை கிடைக்கும்.
வருங்கால வைப்பு நிதி
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும்.
பணியின்போது இறந்தால்
அரசு ஊழியர் பணியின்போது இறந்துவிட்டால் கடைசி ஊதியத்தில் 30% தொகை குடும்ப பென்சனாக கிடைக்கும். 7 ஆண்டுகளுக்கு பின் பணியின்போது இறந்தால் கடைசி ஊதியத்தில் 50% குடும்ப பென்சனாக கிடைக்கும்.
வருங்கால வைப்பு நிதி
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (PF), வருங்கால வைப்பு நிதியில் முன்பணம் பெறும் வசதி, வருங்கால வைப்பு நிதியில் கடன் பெறும் வசதி, பணிக்கால பணிக்கொடை (Gratuity), இறப்பு பணிக்கொடை (Death Gratuity), பணி ஓய்வு பணிக் கொடை (Retirement Gratuity) ஆகியவை கிடைக்கும்.கவிலைப்படி உயர்த்தப்படும்போதெல்லாம் பென்சன் தொகையும் உயரும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தில் மாதாந்திர மருத்துவப் படியாக 300 ரூபாய் கிடைக்கும். பங்களிப்பு பென்சன் திட்டத்தில் இந்த பணம் கிடைக்காது. பழைய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப பாதுகாப்பு நிதியாக 50,000 ரூபாய் கிடைக்கும்.
கூடுதல் ஓய்வூதியம்
80 வயதுக்கு மேல் உயிருடன் இருப்போருக்கு கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் 20% முதல் 100% வரை அதிகமாக கிடைக்கும்.
இந்தச் சலுகைகள் அனைத்தும் பங்களிப்பு பென்சன் திட்டத்தில் கிடைக்காது. இதனைக் கருத்தில்கொண்டே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தித் தொடர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.
மேலும் படிக்க...
Share your comments