உடலுக்குத் தேவையான சத்துக்களை வழங்குவதில் பால் முக்கிய இடம் பிடிக்கிறது. இருப்பினும் நாம் தேவையானதை விட அதிகமான பால் குடித்தால், அது உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஒரு கிளாஸ் பாலில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இது வலுவான எலும்புகள் மற்றும் தசை வளர்ச்சியுடன் இணைக்கப்பட்ட ஊட்டச்சத்து ஆகும். அதனால்தான் பால் மற்றும் பிற பால் பொருட்கள் மக்களின் விருப்பத் தேர்வாக உள்ளது.பால் நம் எலும்புகளுக்கு நல்லது என்றபோதிலும், இது எடையைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதே நேரத்தில் இது உங்கள் ஆரோக்கியத்தையும் கெடுக்கும். எப்படியென்றால், நாம் தேவையானதை விட அதிக பால் குடித்தால், அது உடலில் பல சிக்கல்களை ஏற்படுத்தும்.
செரிமான பிரச்சினை
அதிகளவில் பால் குடிப்பதை வழக்கமாக்கிக்கொண்டால், உங்கள் செரிமானம் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். இதனுடன், சில நேரங்களில் வாய்வு பிரச்சனையும் உருவாக வாய்ப்பு உள்ளது.
சோர்வு
பால் குடிப்பது சில நேரங்களில் அமைதியின்மை, சோர்வு மற்றும் சோம்பல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். நீங்கள் பண்ணை பாலைப் பயன்படுத்தினால், அதில் ஏ 1 கேசீன் உள்ளது. இது குடலில் அழற்சியை ஏற்படுத்துகிறது. அத்துடன் பாக்டீரியாவையும் ஊக்குவிக்கிறது.
சருமப் பாதிப்பு
அதிகப்படியான பால் உட்கொள்வது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்காது. முகப்பரு பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த விஷயத்தில் பாலை சரியாக எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதயக் கோளாறு
ஒரு நாளில் மூன்று டம்பளருக்கு மேல் பால் குடித்தால், இதயம் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்பது, பல ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
அழகை என்றும் தக்கவைக்க- இவற்றுக்கு 'உ ஊ' சொல்லுங்க!
ஐஸ் வாட்டர் குடித்தால் இதயத் துடிப்பு குறையும்- நிபுணர்கள் எச்சரிக்கை!
Share your comments