1. வாழ்வும் நலமும்

பயோ டீசலாக மாறும், உபயோகித்த சமையல் எண்ணெய்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Opportunity to convert used cooking oil into biodiesel!

நமது நாட்டில் சமையல் எண்ணெய்யின் நுகர்வு ஆண்டுக்கு 22.5மெ.டன்னாக உள்ளது. பெரிய ஹோட்டல் களில் ஓரு முறை உபயோகித்த சமையல் எண்ணெய்யைக் குறைந்த விலைக்கு சிறு ஹோட்டல்கள்,சாலையோர பலகாரகடைகள் வாங்கிச்சென்று தங்கள் தேவைக்குப் பயன்படுத்துகின்றனர். வியாபாரிகளின் இந்த குறுகிய எண்ண நடவடிக்கையால், நடுத்தர மக்களின் உடல்நலத்தில் உலை வைக்கின்றனர்.

விளைவுகள்

அவ்வாறு பயன்படுத்திய எண்ணெய்யை இந்த வியாபாரிகள் வாங்கிப் பயன்படுத்துவதால், வாடிக்கையாளர்களுக்கு புற்று நோய், இதயபாதிப்பு நெஞ்சு எரிச்சல் போன்றவை எளிதில் ஏற்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. பொதுவாகக் கலப்பட எண்ணெய் பாதிப்பு ஒரு பக்கம் இருக்கும் நிலையில், இந்த பாதிப்பு பாமர மக்களின் அன்றாட வாழ்வின் ஆரோக்கியத்தில் குதுகலமாக விளையாடுகிறது.


எனவே இத்தகைய குறைபாடுகளைக் களைய மத்திய அரசும்,தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றன.இதற்கு மாற்று வழியும் கண்டறியப்பட்டுள்ளது. அதுதான் பயோ டீசல் தயாரிப்பு. ருக்கோ(RUCO ) என்ற அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு, இந்த ஒருமுறை உபயோகப்படுத்திய எண்ணெய்யை ரூபாய், 30க்கு 1 லிட்டர் என்ற விலையில் வாங்குகிறது. பின்னர் இந்த எண்ணெய்யை பயோ டீசல் போன்ற இயற்கை எரிபொருட்களைத் ள் தயாரிக்க பயன்படுத்தபடுகிறது.

எனவே ஒரு முறையப் பயன்படுத்திய எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் உணவு, பாதுகாப்பு துறை சிறு மற்றும் குறு வியாபாரிகளைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டியது மிக மிக அவசியமாகிறது.

எரிபொருட்களின் விலையும் உயர்ந்து வருவதால், பயோ டீசல் பயன்பாடு இன்றைய கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது.எனவே நமக்கு நாமே பொருப்புணர்ச்சியுடன் ஒரு முறை பயன்படுத்தியத எண்ணெய்யை மறுபடியும் பயன்படுத்த கூடாது என்ற முடிவில் உறுதியாக இருப்போம்.

தகவல்
அக்ரி சு.சந்திர சேகரன்
வேளாண் ஆலோசகர்
அருப்புக்கோட்டை

மேலும் படிக்க...

உடல் எடையைக் குறைக்க உதவும் ராகி!

நீங்க இந்த Teaயை Try செய்யுங்க - அதிசயிக்க வைக்கும் நன்மைகள்!

English Summary: Opportunity to convert used cooking oil into biodiesel! Published on: 09 March 2022, 10:35 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.