தக்காளி, கத்திரி உள்ளிட்ட காய்கறிக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படுவதால், விவசாயிகள் பயன்பெறுமாறு தோட்டக்கலைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீரிய ரக உற்பத்தி (Active type production)
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் என்ற ஊரில் அமைந்துள்ள காய்கறி மகத்துவ மையம் என்ற அரசு நிறுவனத்தின் சார்பில் உயர்ரக தொழில் நுட்பத்துடன் தக்காளி ,மிளகாய், கத்தரி மற்றும் காலிபிளவர் போன்ற பயிர்களை குழித்தட்டு முறையில் வளர்க்கப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் (All over Tamil Nadu)
இந்த முறைப்படி வளர்க்கப்படும் கன்றுகள், விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாகத் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு இந்த கன்றுகள் வழங்கப்படுகின்றன.
முன்பதிவு அவசியம் (Booking is required)
விவசாயிகள் ஒரு ஏக்கர் நிலத்திற்கு முழுமையாக நட தேவையான கன்றுகளை இல்வசமாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.எனவே தற்போது கிடைக்கும் இந்த வீரிய ரக ஓட்டு வகைக் கன்றுகளைப் பெற விவசாயிகள், தங்கள் பெயரை முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
அனுமதிச்சீட்டு (Ticket)
இதற்கு விவசாயிகள், தங்கள் அருகாமையிலுள்ள ஒன்றிய அலுவலகத்தில் உள்ள தோட்டக்கலை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு உதவி தோட்டக்கலை இயக்குனர் இடம் விண்ணப்பம் கொடுத்து அனுமதி சீட்டுக் கொள்ளலாம்.
பிற மாவட்ட விவசாயிகள் (Other district farmers)
இந்த அனுமதிச்சீட்டின் உதவியுடன் இலவசக் கன்றுகளைப் பெற்றுப் பயனடையலாம்.
திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றிய அனைத்து பகுதி மாவட்டங்களும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆண்டு முழுவதும் (Throughout the year)
பொதுவாகப் போக்குவரத்து செலவு பிரச்சனை இல்லை எனும் பட்சத்தில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இதனை பெற்றுக் கொள்ளலாம்.வருடம் முழுவதும் இந்த வகை நாற்றுகள் கிடைக்கும்.
தகவல்
பிரிட்டோ ராஜ்
வேளாண் பொறியாளர்
மேலும் படிக்க...
கரூர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத்திற்கு ரூ.21¾ கோடி ஒதுக்கீடு!
121 வகை மாம்பழங்களை ஒரே மாமரத்தில் வளர்த்து சாதனை!
Share your comments