குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொடுக்க வேண்டியது தான் பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாகும். அப்போது தான், எப்போதும் குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் சாப்பிடும் தின்பண்டங்கள் பலவும், ஆரோக்கியமற்றவை என்பதை நாம் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
குழந்தைகள் விரும்பும் ஜங் ஃபுட்
இயல்பாக இன்றைய காலத்தில், பல குழந்தைகள் ஜங் ஃபுட்டைத் தான் அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இதன் காரணமாக சிறுவயதிலேயே அவர்கள் நோய் வாய்ப்பட காரணமாக அமைகிறது. ஜங் ஃபுட்களை அதிகம் சாப்பிடுவதால் பல நோய்களை ஏற்படுத்தி விடுகிறது. அவ்வகையில் ஜங் ஃபுட் எடுத்துக் கொள்வதால் ஏற்படும் தீமைகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். அப்போது தான், இனியாவது நம் குழந்தைகளை ஜங் ஃபுட் என்ற மாயத்தில் இருந்து பாதுகாக்க முடியும்.
ஜங் ஃபுட் ஏற்படுத்தும் பக்கவிளைவுகள்
குழந்தைகள் ஜங் ஃபுட்களை அதிகம் சாப்படுவதால், அவர்கள் மூளையில் வேதியியல் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தம், பதற்றம் மற்றும் உடற்பருமன் போன்றவை ஏற்படுகிறது.
இந்த வகை உணவுகளில் கொழுப்புச்சத்துகள் அதிகம் உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு கல்வியில் கற்றல் குறைபாடு, மறதிநிலை, விழிப்பு நிலை குறைபாடு மற்றும் புலன் உணர்வு செயல்பாட்டில் மந்தம் போன்றவையும் ஏற்படுகிறது.
வறுத்த உணவுகள் மற்றும் பாக்கெட் உணவுகள் சாப்பிடுவதால், உடலின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக அல்சீமர்ஸ் போன்ற மறதி நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆய்வு சொல்வது என்ன?
சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில், சில வகை ஜங் உணவுகளை குழந்தைகள் உட்கொள்வதால், அவர்களின் அறிவு மழுங்குகிறது மற்றும் மறதி அதிகரிக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிய வந்துள்ளது.
இனிப்பு வகைகளை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு, நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகின்றது. ஆகையால், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள், இனிப்புகள் மற்றும் செயற்கை ஜூஸ் வகைகளையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.
பெற்றோர்களே இனியாவது விழிப்போடு இருந்து, உங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட வையுங்கள். ஆரம்பத்தில் சாப்பிட மறுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல குழந்தைகளே ஆரோக்கிய உணவுகளை விரும்ப ஆரம்பித்து விடுவார்கள்.
மேலும் படிக்க
Share your comments