1. வாழ்வும் நலமும்

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

KJ Staff
KJ Staff
Credit : My inspired thoughts - blogger

கம்பு, சாமான்யர்களும் பயன்படுத்தக்கூடிய எளிமையான ஒரு புன்செய் நிலப்பயிராகும். இது 3, 4 மாதங்களிலேயே வளரக்கூடிய குறுகிய காலப்பயிர் என்பதோடு, கம்பு (Pearl Millet) எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது என்ற காரணத்திற்காகவே இந்தியாவில் அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது.

கம்பின் ஊட்டச்சத்து

  • புரோட்டீன் 22 கிராம்
  • நீர்ச்சத்து 17.3 கிராம்
  • கார்போஹைட்ரேட் 62 கிராம்
  • கொழுப்பு 5 கிராம்
  • கால்சியம் 27 மி.கி.
  • நார்ச்சத்து 12 கிராம்
  • பாஸ்பரஸ் 289 மி.கி.
  • மெக்னீசியம் 124 மி.கி.
  • ஒமேகா 3 கிராம்
  • கொழுப்பு அமிலங்கள் 140 மி.கி.
  • இரும்பு 6.4 மி.கி.
  • துத்தநாகம் 2.7 மி.கி.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்

நீரிழிவு நோயைக் (Diabetes) கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதிக நார்ச்சத்து இருப்பதால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது இது மெதுவாக செரிப்பதால், குளுக்கோஸை (Glucose) மெதுவான விகிதத்தில் வெளியிடுகிறது.

கொழுப்பைக் குறைக்கிறது

கம்பில் பைட்டோ கெமிக்கல் (Phytochemical) உள்ளது, கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய, பைடிக் அமிலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும்.

செரிமானத்திற்கு உதவுகிறது

கம்பில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது

கம்பில் புற்றுநோய் (Cancer) கட்டிகளை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. ஒரு ஆய்வில் கம்பு உணவை வழக்கமாக உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் வரக்கூடிய மார்பகப்புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகாமல் பாதுகாக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் சுரப்பிற்கு குழந்தை பெற்ற சில பெண்களுக்கு, தாய்ப்பால் சுரப்பு குறைந்தோ அல்லது முற்றிலுமாக நின்றுவிடும். இவர்கள் தினமும் கம்பு கூழ், களி போன்றவற்றை சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

தள்ளுவண்டிக் கடைகளில் இனி வாழை இலை கட்டாயம்- உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

English Summary: Pearl Millet to protect women's health! We know many more uses Published on: 29 December 2020, 10:24 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.