1. வாழ்வும் நலமும்

மிளகும், மிளகின் அற்புத குணங்களும்! மிகப் பெரிய வயிற்று வலி நிவாரணி!

Deiva Bindhiya
Deiva Bindhiya

Pepper, and the amazing properties of pepper! Great Stomach Pain Reliever!

மிளகு நமது சமையலறையில் மிக முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். சில உணவுகளில் மிளகு அப்படியே சேர்ப்பதும், மற்றவற்றில் தூளாக உபயோகிப்பதும், உணவின் சுவையை அதிகரிக்கிறது. உணவில் சுவையைச் சேர்ப்பதோடு மட்டுமல்லாமல், மிளகு பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளதாகும்.

ஆயுர்வேதத்தில் மிளகு ஒரு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த பதிவில் கருப்பு மிளகின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி மேலும் அறியலாம்.

இருமல் சளி மற்றும் மூக்கு ஒழுகுவதற்கான தீர்வு:

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு ஆகியவற்றை இஞ்சி சாறுடன் (இஞ்சி) எடுத்துக் கொன்டால், நன்மை பயக்கும். இதை தேநீரில் கலந்து சாப்பிடலாம்.

வலி நிவாரணம்

கருப்பு மிளகில் உள்ள பைபரின் அளவு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது தசைகளில் ஏற்படும் வலியை தடுக்கிறது. இது மசாஜ் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. கருப்பு மிளகை எண்ணெயுடன் கலந்து சூடு படுத்தி, வலி இருக்கும் பகுதிகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் பெறலாம்.

வயிற்றுக்கு நல்லது

கருப்பு மிளகு உட்கொள்வது வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை உருவாக்குகிறது. இது உணவை ஜீரணிக்க உதவுகிறது. இது வயிற்று வலி வாயு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்சனைகளையும் நீக்குகிறது என்பது குறிப்பிடதக்கது.

முகமும் பளபளக்கிறது

இதைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்படலாம், ஆனால், அது உண்மைதான்! கருப்பு மிளகை வைத்து ஸ்க்ரப்பிங் (scrubbing) செய்தால், முகத்தில் பிரகாசத்தை அதிகரிக்கும். கருப்பு மிளகு பெரிய துண்டுகளாக நசுக்கி தேனுடன் கலந்து தெய்த்தால் முகம் பளபளக்கும். மேலும், இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் தோல் பளபளப்பாகிறது. மிளகு அளவு குறைவாக இருக்க வேண்டும்.

எடையைக் குறைக்க உதவுகிறது

கருப்பு மிளகு நம் உடலில் இருக்கும் கொழுப்பையும் குறைக்கிறது. இது செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. மேலும் குறுகிய காலத்தில் அதிக கலோரிகளை எரிக்கிறது என்பது மிக முக்கியமானதாகும். மிளகு உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் படிக்க:

பால் பவுடர் ஃபேஸ் பேக் ட்ரை செய்ததுண்டா, செய்து பாருங்கள்!

தமிழகம்: 10வது பொதுத் தேர்வு நேர அட்டவணை 2022, விவரம் உள்ளே!

English Summary: Pepper, and the amazing properties of pepper! Great Stomach Pain Reliever!

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.