1. வாழ்வும் நலமும்

மழைக்காலத்தில் ஆஸ்துமா பிரச்சனைகளுக்கான முன்னெச்சரிக்கைகள்

Aruljothe Alagar
Aruljothe Alagar
Precautions for asthma problems

ஆஸ்துமா என்பது ஒரு சுவாச நோயாகும், இது நுரையீரலுக்கு காற்றை கொண்டு செல்லும் காற்றுப்பாதையில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. சாதாரண காலத்தில், ஆஸ்துமா என்பது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவதாகும். உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிக்கையின்படி, இந்தியாவில் சுமார் 15-20 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். பல ஆஸ்துமா நோயாளிகள் மழைக்காலத்தில் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறார்கள், மழை ஏன் ஆஸ்துமா பிரச்சனையை பாதிக்கிறது என்று பார்க்கலாம்.

பருவகால ஆஸ்துமா

பருவமழையின் போது கடும் குளிர் சூழலும், காற்றும் ஆஸ்துமா பிரச்சனையை அதிகரிக்கின்றன. சுற்றுப்புறத்தில் தொடர்ச்சியான ஈரப்பதம் பூஞ்சை உருவாவதற்கு வழிவகுக்கிறது, இது ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி ஆஸ்துமா பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. ஆஸ்துமா பிரச்சனை  மூத்த குடிமக்களுக்கு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அதே வேளையில் இளையவர்களுக்கு அதனுடைய  அறிகுறிகள் மோசமாகவே இருக்கின்றன. மொத்தத்தில், மழை பெய்யும் போது ஆஸ்துமா உள்ளவர்களுக்கு கடினமான நாட்களாகும். மழைக்காலத்தில் ஆஸ்துமா மோசமடைவதற்கான காரணங்களைப் பார்ப்போம்.

மழைக்காலத்தில் ஆஸ்துமாவை மோசமாக்குவது எது:

மகரந்தம் அதிகரித்தது

ஆஸ்துமாவின் முக்கிய காரணங்களில் ஒன்று மழை. மழைக்காலத்தில், சுற்றுச்சூழலில் உள்ள பல மகரந்தங்கள் ஆஸ்துமா பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. காற்றில் ஈரப்பதம், பூஞ்சை, தீவிர வானிலை போன்ற பல்வேறு காரணங்களால் இந்த மகரந்தங்கள் அதிகரிக்கின்றன. அதன் பாதகமான விளைவு பெரும்பாலும் இரவில் காணப்படுகிறது.

நச்சு வாயு

மழைக்காலங்களில், அசல்பர், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் மழைக்காலங்களில் அதிகம் வெளியாகிறது. இந்த நச்சு வாயுக்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சரியாக சுவாசிப்பதற்கு கடினமாக்கி இறுதியில் ஆஸ்துமா பிரச்சனையை ஏற்படுத்துகிறது.

பூஞ்சை

இருண்ட வானிலை மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக ஏற்படும் ஈரப்பதம் சுற்றுப்புறங்களில் புழுதியுடன் சேர்ந்து பூஞ்சையின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இந்த மாசுக்கள் மூச்சுக்குழாய் கோளாறுகளை ஏற்படுத்துவதால் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.

வைரஸ் தொற்று

பருவமழையுடன், பல்வேறு வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் சுற்றுச்சூழலுக்குள் நுழைகின்றன. ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பல ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன. இது தவிர கோபம், உற்சாகம், பயம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சி போன்ற உணர்ச்சி காரணிகளும் சுவாசப் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. ஆஸ்துமாவை குணப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் ஆனால், அதை கட்டுப்படுத்த முடியும்.

மழைக்காலத்தில் ஆஸ்துமாவை எப்படி சமாளிப்பது?

ஆஸ்துமா நோயாளிகள் செல்லப்பிராணிகளுடனான ஒவ்வொரு தொடர்பையும் தவிர்க்க வேண்டும். நோயாளியின் படுக்கையறையிலிருந்து அவர்கள் விலகி இருக்க வேண்டும்.

ஈரமான இடங்களான கழிப்பறைகள், குளியலறை போன்றவற்றை பூஞ்சை இல்லாமல் ப்ளீச், கிருமிநாசினிகள், சவர்க்காரம் போன்றவற்றால் சுத்தம் செய்யுங்கள்.

ஆஸ்துமா நோயாளிகள் தங்கள் மருந்துகளைத் தவிர்க்கக் கூடாது. ஒரு உணவியல் நிபுணரின் ஆலோசனையுடன் ஒரு சீரான உணவை உட்கொள்ளுங்கள்.

அனைத்து விரிப்புகள், தலையணை கவர்கள், படுக்கை தாள்களை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

ஆஸ்துமா ஒரு நாள்பட்ட நோயாகும், இது சில அத்தியாவசிய குறிப்புகளின் உதவியுடன் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். பருவமழை காலங்களில், ஆஸ்துமா நோயாளிகள் சிரமங்களை சந்திக்க நேரிடும், ஆனால், ஆஸ்துமாவுக்கான பருவமழை முன்னெச்சரிக்கையுடன், நீங்கள் நிச்சயமாக அதன் விளைவைக் குறைக்கலாம். தேவைப்பட்டால் மருத்துவரை அணுகி மருத்துவ பரிசோதனை செய்யுங்கள்.

மேலும் படிக்க... 

இதை தினமும் சாப்பிட்டால் உங்கள் ஆயுள்கூடும்!

English Summary: Precautions for asthma problems during the rainy season Published on: 19 August 2021, 02:37 IST

Like this article?

Hey! I am Aruljothe Alagar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.