1. வாழ்வும் நலமும்

இதை தினமும் சாப்பிட்டால் உங்கள் ஆயுள்கூடும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Eating this every day can prolong your life!

Credit: Ethix

தினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது போல் தினம் ஒரு நெல்லிக்காயினை சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். காரணம் அதில் பலதரப்பட்ட மருத்துவ பலன்கள் உள்ளன.

ஏராளமான மருத்துவப் பயன்கள் (Lots of Medical benefits)

அதிலும் தேனில் ஊறவைத்துள்ள நெல்லிக்கனியினை சாப்பிடும் போது எண்ணற்ற நன்மைகள் நமக்குக் கிடைப்பது உறுதி.

கல்லீரல் சுத்தமாகும் (The liver is cleansed)

கல்லீரலில் உள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, கல்லீரல் சிறப்பாக செயல்பட்டு, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும். மேலும் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த சிகிச்சையளிக்கும்.

ஆஸ்துமா (Asthma)

ஆஸ்துமா மற்றும் இதர சுவாச பிரச்னையால் கஷ்டப்படுபவர்கள், தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், டாக்ஸின்கள் மற்றும் நுரையீரலை ப்ரி - ராடிக்கல்களிடமிருந்து பாதுகாக்கும்.

இதனால் சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் வராமல் தடுக்கும். சளி, இருமல் மற்றும் தொண்டைக்கட்டு தேனில் ஊற வைத்த நெல்லிக்காயுடன் சிறிது இஞ்சி சாற்றினை சேர்த்து உட்கொண்டு வந்தால், மருத்துவ குணங்களால் கிருமிகள் அழிக்கப்பட்டு, விடுதலை கிடைக்கும்.

செரிமானப் பிரச்னைகள் (Digestive problems)

  • தினமும் ஒன்று சாப்பிட்டு வர, உண்ணும் உணவுகள் எளிதில் செரிக்கப்படுவதோடு, மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் பிரச்னைகள் நீங்கும்.

  • நச்சுக்கள் வெளியேறும் உடலில் தினமும் சேரும் நச்சுக்களை வெளியேற்ற அன்றாடம் தேனில் ஊற வைத்த நெல்லிக்காயை சாப்பிட வேண்டும்.

  • இதன்மூலம் உடலில் தீங்கு விளைவிக்கும் ப்ரீ-ராடிக்கல்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.

மலட்டுத்தன்மைக்குச் சிகிச்சைபெறும் தினமும் ஆண்கள் மற்றும் பெண்கள் இதனை உட்கொண்டு வந்தால், கருவுறுதலில் ஏற்படும் பிரச்னையைத் தடுக்கலாம்.

மாதவிடாய் பிரச்னை தீர (Coastal menstrual problem)

அதுமட்டுமின்றி, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் மாதவிடாய் சுழற்சியும் சீராகும்.

அல்சர் (ulcer)

அல்சர் பிரச்னையால் கஷ்டப்படுபவர்கள், தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. இப்படி தினமும் தொடர்ந்து செய்துவர, விரைவில் அல்சர் குணமாகும்.

ரத்தணுக்கள் அதிகரிக்கும் (Blood cells increase)

இதனைத் தினமும் சாப்பிடுவதால், உடலில் ரத்தணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த சோகை வராமல் இருப்பதோடு, உடலின் அனைத்து உறுப்புக்களும் ஆரோக்கியமாக செயல்படும்.

கொலஸ்ட்ரால் குறையும் (Cholesterol lowering)

தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊற வைத்த நெல்லிக்காய் உட்கொண்டு வர, அதில் உள்ள வைட்டமின் சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும்.

முதுமையை தடுக்கும் (Preventing aging)

உடலுக்கு ஆற்றலை வழங்கி, உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ளும். மேலும் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகளையும் நீக்கும்.
எனவே தேனில் ஊறிய நெல்லிக்கனியை சாப்பிட்டு, ஒவ்வை மூதாட்டிபோல நாமும் ஆரோக்கியமாக வாழ்வோம்.

மேலும் படிக்க...

நன்மை பயக்கும் எண்ணெய் வித்துக்கள்:புதிய ரக வேர்க்கடலை: இந்தியா வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் கண்டுபிடிப்பு!

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் வேர்க்கடலை!

இதயத்திற்கு ஆற்றல் அளிக்கும் எள்!

English Summary: Eating this every day can prolong your life!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.