கிருஷ்ண ஜெயந்தி நாளில் எளிமையான முறையில் வீட்டிலையே வெண்ணெய் தயார் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
இந்த ஆண்டு 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி வரும் திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு எல்லா வீடுகளிலும் வித விதமான இனிப்பு மற்றும் உணவு வகைகளை செய்து அசத்துவர். அவற்றில் அதிக அளவு கிருஷ்ணருக்கு பிடித்த வெண்ணெய் கலந்த உணவு வகைகள் இருக்கும். பெரும்பாலும், கடையில் வாங்கிய வெண்ணெயினை கொண்டே உணவு பொருட்கள் தயார் செய்வது வழக்கம்.
வெண்ணெய் பாரம்பரியம்
வெண்ணெய்யானது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பயன்பாட்டில் இருந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை, கறந்த பாலை காய்ச்சி, உறையவைத்து எடுத்து, அதில் கடைந்த வெண்ணெயை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தனர். வளர்ந்துவிட்ட நவீன காலத்தில், பல பாரம்பரிய உணவு முறைகளைத் நாம் தொலைத்து வருகிறோம்.
இந்த கிருஷ்ண ஜெயந்தி நாளில் எளிமையான முறையில் வீட்டிலையே வெண்ணெய் தயார் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வெண்ணெய் செய்முறை
-
வெண்ணெய் தாயரிக்க முதலில் சில நாட்களுக்கு முன்பிருந்தே காய்ச்சி ஆற வைத்த பாலில் சேரும் ஆடையை மட்டும் ஒரு பாத்திரத்தில் எடுத்து ஃபீரசரில் சேமித்து வர வேண்டும்
- முதல் நாளில் சேமிக்கும் ஆடைக்கு பிறகு சிறுது தயிர் சேர்த்துக்கொள்ளவேண்டும். வெண்ணை தயார் செய்யும் அளவிற்கு ஆடை சேர்ந்த பின் அதனை எடுத்து, ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு ஓரிரு முறை அரைத்து கொள்ளவும்.
-
பிறகு நிறைய குளிர்ந்த தண்ணீர் விட்டு மறுபடியும் அரைக்க வேண்டும். சேர்த்து வைத்த பாலாடை முழுதையும் இதே போல் அரைத்துக்கொள்ளவும்.
-
அப்போது, வெண்ணெய் மட்டும் கெட்டியாக மேலே மிதக்கும். அவற்றை, ஒரு கண்ணாடி பாத்திரத்தில் பந்து போல் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு முறை தண்ணீரில் அலசினால் பந்து போல் வெண்ணெய் உருண்டு வரும் .
வெண்ணெயிலிருந்து நெய் எடுத்தல்
நெய் வேண்டுமென்றால், ஒரு அடி கனமான கடாயில் குறைத்த அளவு தீயில் அந்த வெண்ணெயை வைத்து உருக்க வேண்டும்.. அப்போது, வெண்ணெய் முழுதும் உருகி பொன்னிறத்தில் வரும். அதனை எடுத்து ஆற வைத்து ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து கொள்ளுங்கள். இதனை கிருஷ்ண ஜெயந்தி நாளில் மற்ற இனிப்பு பொருட்கள் செய்வதற்கு பயன்படுத்துங்கள்..!
Read more
நாள்பட்ட நோய்களா? இதன் குறைபாடாக இருக்கலாம்... இப்போவே செக் செய்யுங்கள்!
பீட்ரூட் சாற்றின் ஆரோக்கிய நன்மைகள்- வேர் முதல் நுனி வரை அனைத்திலும் பலன்!Java
Plum | பருவ மழைக்கால நோய்களை தடுக்க ஒரு கப் "நாவல் பழம்" போதும்!
Share your comments