மூலிகைகளின் ராணி துளசி. ஆயுர்வேத மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படும் மூலிகை செடி. இதன் இலைகள் மட்டுமன்றி பூக்களிலும் எண்ணற்ற நண்மைகள் நிறைந்துள்ளன. தென் இந்திய வீடுகளில் அதிகம் வளர்க்கப்படும் செடிகளில் துளசியும் இடம் பெறும். துளசியை கொண்டு உடலில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே தீர்வு காணலாம்.
இயற்கை வைத்தியம்
இருமல்
இருமல், சளி, ஜலதோஷம் உள்ளிட்டவைகளுக்கு இலவசமாக கிடைக்கும் அருமருந்து துளசி. இருமலைக் கட்டுப்படுத்தும் யூஜினால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் இதில் உள்ளன. உடலில் வெப்பத்தை உண்டாக்கி கோழையை அகற்றுவதுடன், உடலில் உள்வெப்பத்தை ஆற்றும் குணமும் இதற்கு உண்டு.
இரத்த அழுத்தம்
துளசி இலை, முற்றிய முருங்கை இலைகளை சம அளவு எடுத்து பின் சாறு எடுத்து, 50 மில்லி சாற்றில் , 2 சிட்டிகை சீரகப்பொடி சேர்த்து காலை, மாலை இருவேளையும் 48 நாட்கள் உண்டு வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இதை சாப்பிடும் காலத்தில் உப்பு, புளி, காரம் குறைக்க வேண்டும்.
காய்ச்சல்
10 துளசி இலையுடன் 5 மிளகை நசுக்கி, 2 டம்ளர் நீர்விட்டு, அரை டம்ளர் சுண்டும்படி காய்ச்சி, குடித்து விட்டு, சிறிது எலுமிச்சை சாறை அருந்தி, கம்பளிக் கொண்டு உடம்பு முழுக்க மூடிக்கொண்டு படுத்தால் மலேரியா காய்ச்சல் கூட படிப்படியாக குறையும்.
மன அழுத்தம்
தினமும் துளசியை சாப்பிட்டு வர அதில் உள்ள அடாப்டோஜென் மன அழுத்தத்தை குறைக்கும்.
இதய நோய்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் துளசி இலைகளை சாப்பிட்டு வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வராமல் தடுக்கிறது.
வாய் பிரச்சனை
ஈறுகளில் எந்த பிரச்சனை இருந்தாலும் துளசியை பொடி செய்து அத்துடன் சிறிது கடுகெண்ணை சேர்த்து பேஸ்ட் செய்து, ஈறுகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் விரைவில் வாய் சம்பத்தப்பட்ட பிரச்சனை நீங்கும்.
கண்கள்
கண்களில் அரிப்பு, எரிச்சல், புண் இருந்தால் துளசியின் சாற்றை கண்களில் ஊற்றினால் விரைவில் குணமாகும்.
நீரிழிவு
வெறும் இலைகள் மட்டும் சாப்பிட்டு வந்தால் போதும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி , இன்சுலின் சீராக சுரக்கப்பட்டு, நீரிழிவை கட்டுப்பாட்டில் வைக்கிறது.
சிறுநீரக கற்கள்
துளசி சாறுடன் சிறிது தேன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தால் குணமாகிவிடும்.
தொண்டை புண்
துளசியை நீரில் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் வாயை கொப்பளித்தால் தொண்டைப் புண் குணமாகிவிடும்.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments