வேம்பின் (Neem) அனைத்து பாகங்களின் மருத்துவ குணங்களும் நாம் அறிந்ததுதான். தற்போது வேப்பம்பூ பூக்கும் காலம் என்பதால் அதன் அருங்குணங்களை அறிந்து கொள்வோம்
அருங்குணங்கள்
- வேப்பம் பூ வெயில் காலத்தில் மட்டுமே பூக்கும் என்பதால் அதை சுத்தப்படுத்தி காய வைத்துக் கொண்டால் வருடம் முழுக்க பயன் படுத்திக் கொள்ளலாம். மாதக்கணக்கிலும் அதன் மருத்துவ குணம் குறையாது.
- வேப்பம் பூ உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. உடலுக்கு பலத்தை தரக்கூடியது. வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்றுகிறது.
- குழந்தைகளுக்கு தோல் அரிப்பு, திடீர் திடீரென்று கை கால்களில் ஏற்படும் தடிப்பு, அலர்ஜி போன்ற பிரச்னைகளை வராமல் தடுக்க வேப்பம் பூவை வாரம் ஒரு முறை உணவில் சேர்க்கலாம்.
- வேப்பம் பூவானது நாக்கில் ஏற்படும் பூஞ்சை தொற்றை சரி செய்யும். வேப்பம் பூவை ஊற வைத்து அந்த நீரை பருகுவதால் அல்லது அந்த நீரால் வாயை கொப்பளிப்பதாலும் சரி செய்ய முடியும். இது அல்சருக்கும் அருமருந்து.
- வேப்பம்பூவை சிறிதளவு தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் நீரிழிவு நோயாளிகள் அவற்றை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.
- உடலில் உள்ள தேவையற்ற காற்றை வேப்பம்பூ வெளியேற்றுவதால் தானாகவே ரத்த அழுத்தம் குறையும். அதேபோல் கல்லீரலில் தேவையற்ற கொழுப்பும் சேராமல் பார்த்துக் கொள்ளும்.
- உஷ்ண உடம்பு கொண்டவர்கள் வேப்பம் பூவை அளவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், இது உடல் சூட்டை அதிகப்படுத்திவிடும்.
- அதேபோல் வயிற்றுப்போக்கு, மூல நோய் மற்றும் அதிக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
- வேப்பம்பூவை துவையலாகவோ, ரசமாகவோ அல்லது குழம்பாகவோ எடுத்துக் கொள்ளலாம். இதனால் கசப்புத் தன்மை குறைந்துவிடும்.
மேலும் படிக்க
Share your comments