1. வாழ்வும் நலமும்

மலச்சிக்கலுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள்

KJ Staff
KJ Staff

மனிதனின் உடலுக்குள் நடக்கும் செயல்பாடுகள் சரியாக நடந்தால் எந்த ஆபத்தும் இல்லை ஆனால் அதே செயல்பாடு சிறிது மாற்றம் பெற்றால் பின் கொஞ்சம் கொஞ்சமாக உடலுக்கு நோய் உண்டாவதை நம்மால் தடுக்க முடியாது. மனிதன் காணும் மிக முக்கியப் பிரச்சனை மலச்சிக்கல். மலச்சிக்கல் மனிதனுக்கு பலச்சிக்கல் என்னும் பழமொழி வெறும் வார்த்தை அல்ல. இந்த பிரச்சனை தொடர்ந்தாள் யோசிக்கமுடியாத அளவுக்கு உடலில் நோய் உண்டாகும். இன்றைக்கு நாம் பார்க்கப்போவது இந்த மலச்சிக்கலுக்கான காரணம் மற்றும் எளிய முறையிலான தீர்வு.

ஏன் இந்த பிரச்சனை ஏற்படுகிறது?

பதப்படுத்தப்பட்ட உணவை சாப்பிடுவது,  சீக்கிரம் செரிமாணம் ஆகாத உணவு, அதிக மைதா சேர்க்கப்பட்ட உணவு, நார்ச்சத்து உள்ள உணவை அதிகம் உட்கொள்ளாதது, கொழுப்பு மாற்று சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவது, அதிக உடல் பருமன், நேரம் கடந்து சாப்பிடுவது, உடலுக்கு தேவையான நீரை குடிக்காதது, மது, சிகரெட், பீடி, போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கம், இவை எல்லாம் மலச்சிக்கலுக்கான காரணங்கள்.      

வீட்டிலேயே  நாம் இதற்கு தீர்வு காணலாம்:

சரியான நேரத்திற்கு தேவையான உணவை நம் வயிற்றுக்கு செலுத்தினால் மலச்சிக்கல் ஏற்படுவதை குறைக்கலாம்.வயிறு குறிப்பிட்ட வகையிலான, மற்றும் அளவிலான உணவு பொருட்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் அதற்கு மீறி நாம் செலுத்திக்கொண்டே போனால் மலச்சிக்கல் போன்ற தேவையற்ற பிரச்சனைகளை நாம் சந்திக்க நேரும்.

வாருங்கள் தீர்வை காண்போம்:

தண்ணீர் குடிப்பது:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். பழக்கம் இல்லாதவர்கள் இதனை நாளின் முதல் வேலையாக பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். காலை வேளையில் தண்ணீர்  குடிப்பது வயிற்றை சுத்தப்படுத்துவதோடு வயிற்றில் உள்ள வழிகள் மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படுவதைக் குறைக்கிறது.

நேரத்திற்கு உணவு உண்பது:

காலை, மதியம், இரவு, என நாம் நாளில் மூன்று வேலை உணவு உட்கொள்கிரோம். இந்த மூன்று வேலையும் வயிற்றுக்கு வேண்டிய நேரத்தில்  உணவை  எடுத்துக்கொண்டால்  மற்றும் செரிமானம் எளிதாக நடைபெறுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான சூழல் குறைவு.

அளவான மற்றும் சத்தான உணவு:

சிலர் அளவுக்கு மிஞ்சி உணவு எடுத்துக்கொள்வார், சிலர் குறைவாக, இப்படி செய்வதால் வயிற்றுக்கு அளவுக்கு அதிகமாகவும், குறைவாகவும் உணவு செல்லும் பொது  அங்கு மாற்றம் ஏற்படுகிறது. மேலும் நாம் உட்கொள்ளும் உணவு சத்தானதாக இருக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, மைதா அதிகம் கலந்தது, கொழுப்பு மற்றும் சர்க்கரை அதிகம் கலந்தது, , இவைகளை மலச்சிக்கல்  இருப்பவர்கள் அறவே தவிர்க்க வேண்டும். கோதுமை, கீரைகள், சாதம் சாப்பிட்டால் அடுத்து ரசம் எடுத்துக்கொள்ளும் பழக்கம், மற்றும் பல சீக்கிரம் செரிமானம் ஆகும் உணவுகளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஓமம், கத்தாழை,மணத்தக்காளி கீரை, வென்னீர் இவை அனைத்தும் மலச்சிக்கல் இருப்பவர்களுக்கு மிக சிறந்த மருந்தாகும். உடல் பருமனாக இருப்பவர்கள் உணவு உட்கொண்ட பிறகு,  வென்னீர் குடித்து  வந்தால் செரிமானத்திற்கு சிறந்தது. அசைவ உணவு சாப்பிட்ட பிறகு  எல்லோரும் வென்னீர் குடித்து விட்டால் செரிமானம் ஆவதில் உதவும். மலச்சிக்கல் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் கத்தாழை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள வழிகள் நீங்கி குளிர்ச்சி அளிக்கும் . மணத்தக்காளி கீரை செரிமானத்திற்கு மிகவும் நல்லது.

இதையும் படிக்க: மலச்சிக்கல் இருப்பவர்கள் உணவு பழக்கங்களில் கவனம் மற்றும் கட்டுப்பாடு கொள்ள வேண்டும். வயிற்றுக்கு தேவையான உணவை மட்டும் உட்கொள்வது மிக முக்கியமானது. பாஸ்ட் புட் ( Fast food) உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். இந்த பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது முக்கியம்.

English Summary: Reasons and awesome homemade remedies to get relief from constipation Published on: 02 May 2019, 01:45 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.