1. வாழ்வும் நலமும்

கொரோனாவை குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி! ஆய்வில் தகவல்!

KJ Staff
KJ Staff
Ant
Credit : Dinamalar

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுக்கு தீர்வு காண மருந்துகள் கண்டு பிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. கொரோனா தொற்றை (Covid-19) குணப்படுத்த சிவப்பு எறும்பு சட்னி (Red Ant Chutney) உதவுமா என்பது குறித்து விளக்கம் அளிக்கம்படி ஆயுஷ் அமைச்சகத்திற்கு ஒடிசா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவப்பு எறும்பு சட்னி:

ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் (Indigenous people) சிவப்பு எறும்புகளை பிடித்து, அதனுடன் பச்சை மிளகாய் மற்றும் பாரம்பரிய பொருட்களை பயன்படுத்தி சட்னி ஒன்றை தயார் செய்கின்றனர். இந்த சட்னியை உண்ணுவதன் மூலம் காய்ச்சல், இருமல், பொதுவான சளி, மூச்சுவிடுவதில் சிரமம் மற்றும் சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

ஆய்வில் தகவல்:

ஒடிசாவில் நயாதர் படிஹல் (Nayadar Padihal) என்ற பொறியாளர், பல்வேறு ஆய்வுகளை செய்து, 'செவ்வெறும்பு சட்னி சாப்பிட்டால், கொரோனா பாதிப்பு குறையும்' என, கடந்த ஆண்டு அறிவித்தார். செவ்வெறும்புகளுடன், மிளகாய் சேர்த்து அரைத்த சட்னியை கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்தால், அவர்கள் குணமடைய வாய்ப்பு உள்ளதாக, அவர் கூறினார். இந்த சட்னியில், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், பார்மிக் அமிலம் (Formic acid), புரதம், கால்சியம், விட்டமின் பி 12, இரும்பு, துத்தநாகம் ஆகியவை உள்ளன. இதன் காரணமாக, இந்தியா முழுதும் கொரோனா பாதித்தாலும், பழங்குடியினரை மட்டும் அதிகம் தாக்கவில்லை' என, நயாதர் படிஹர், தன் ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.

பொதுநல மனு:

ஒடிசா நீதிமன்றத்தில் பொது நல மனு (Public Welfare Petition) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 24ம் தேதி கொரோனாவைத் தீர்க்குமா சிவப்பு எறும்பு சட்னி என்பது குறித்து விளக்கம் அளிக்கும் படி நீதிபதிகள் பி.ஆர்.சரங்கி மற்றும் பிரமாத் பட்நாயக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆயுஷ் அமைச்சகம் (Division Bench Ministry of AYUSH), மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரல் ஆகியோருக்கு மூன்று மாதங்களில் பதில் அளிக்கும் படி உத்தரவிட்டுள்ளனர்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!

பெண்களின் ஆரோக்கியம் காக்கும் கம்பு! மேலும் பல பயன்கள் அறிவோம்

English Summary: Red ant chutney to cure corona! Information in the study! Published on: 02 January 2021, 02:54 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub