1. வாழ்வும் நலமும்

புத்துணர்ச்சி தரும் ஓமம் டீ! செய்வது எப்படி?

Deiva Bindhiya
Deiva Bindhiya
Refreshing Ajwine Tea! how to prepare?

உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நம்மில் பல பேர் உடல் அரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவதே இல்லை. இந்த நவீன உலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால், பலருக்கு உடல் பருமன் பிரச்சனை வருகிறது. என்ன தான் அவர்கள் உடல் எடையை குறைக்க பல பயிற்சிகள் செய்தாலும், அவர்கள் ஆரோக்கியமான சில உணவு முறைகளை எடுத்து கொள்வதும் மிகவும் முக்கியமானதாகும்.

நம் பாட்டியின் அஞ்சறை பெட்டியில் இடம் பிடித்த, ஓமம் எனும் ஒரு பொருள் இன்று பலரது வீட்டில் உள்ளதா? என்பதே கேள்விக்குரிய விஷயமாகிவிட்டது.

உடல் செரிமாணத்திற்காக, சில தின்பண்டங்களில் சேர்க்கப்படும் இந்த ஓமம் உங்கள் உடல் எடையை குறைக்க வல்லது, என்பது பலரும் அறியா உண்மை.

மேலும் நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், செரிமான பிரச்சனை இருந்தால் கூட, ஓமத்தை சிறிதளவு தண்ணீரில் கொதிக்க வைத்து பருகினால் இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது குறிப்பிடதக்கது. ஓமம் புரதம், கொழுப்பு, தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை கொண்டுள்ளன. இது தவிர, கால்சியம், தயாமின், ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் நியாசின் ஆகியவை ஓமத்தில் நல்ல அளவில் காணப்படுகின்றன.

ஓமம் உடல் எடையை கூட குறைக்கும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? (How many of you know that Ajwine can even reduce body weight?)

தினமும் காலையில் டீ - காபி போன்றவற்றை குடிப்பவர்கள் வாரத்தில் இரு முறையாவது இந்த ஓமம் டீயை குடித்து பாருங்கள், கண்டிப்பாக வித்தியாசத்தை உணர்வீர்கள்.

ஓமம் டீ தயாரிக்கும் முறை (Method of making AjwineTea)

சிறிதளவு ஓமத்தை இரவு தூங்க செல்வதற்கு முன் தண்ணீரில் ஊற வைத்து வேண்டும். பின் அந்த நீரை வடிகட்டி எடுத்து, கொதிக்க வைத்து, அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு, புதினா, மற்றும் தேன் கலந்து குடித்தால் நீங்களே வித்தியாசத்தை உணர முடியும்.

உடல் எடை குறைவதுடன் புத்துணர்வாகவும் உணர்வீர்கள்.

மேலும் படிக்க:

மஞ்சள் மற்றும் தயிரின் பேஸ் பேக் டிப்ஸ்! அதன் நன்மைகள் என்ன?

அஜீரணம் முதல் சரும பிரச்சனைகள் வரை, தீர்வளிக்கிறது வெற்றிலை!

English Summary: Refreshing Ajwine Tea! how to prepare? Published on: 18 January 2022, 04:10 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.