நாம் அன்றாடம் பயன்படுத்தும் அரிசி கழுவியத் தண்ணீர், சருமம், கூந்தல் பராமரிப்பு என அழகு பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.
இந்தியாவில் பாரம்பரிய உணவு தான் அரிசி. அந்த அரிசி கழுவிய நீரானது, இந்தியாவின் பல பகுதிகளில் அழகு பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் சருமம், கூந்தல் போன்றவற்றைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எண்ணற்ற சத்துக்கள் (Countless nutrients)
ஏனெனில் அரிசி கழுவிய நீரில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை துரிதமாகச் செயல்பட்டு நமக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.
மேலும் ஆய்வுகளிலும் அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி தயாரிப்பது? (How to Prepare)
முதலில் அரிசியை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை சுத்தமான நீரில் 1/2 மணிநேரம் ஊற வைத்து, அந்த நீரை வடிகட்டி சேகரித்து, அந்நீரால் முகம் மற்றும் கூந்தலைப் பராமரிக்கலாம்.
சுருக்கம் நீங்கும் (The abstract will disappear)
அரிசி கழுவிய நீரைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்கும். அத்துடன், சருமத்துளைகளும் அடைக்கப்படும். இதற்கு பஞ்சினை அரிசி கழுவிய நீரில் நனைத்து, பின் அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும்.
பொலிவான முகம் (Bright Face)
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியாக சரும செல்களுக்குள் செல்வதால், சருமம் எப்போதும் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். எனவே தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டியது அவசியம்.
மென்மையான கூந்தல் (Soft Hair)
சிலருக்கு கூந்தல் எப்போதுமே வறட்சியுடன் காணப்படும். அவர்கள் அவ்வப்போது கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும். இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும்.
ஆற்றல்
அரிசி கழுவிய நீர் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, அதனைக் குடித்தால், உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட்டுகளும், மற்ற ஊட்டச்சத்துக்களும் அதிகளில் உள்ளதால், உடலுக்கு வலுசேர்க்கிறது.
என்னங்க இனி அரிசி கழுவியத் தண்ணீரைத் தூக்கி எறியலாமா?
மேலும் படிக்க...
காலக்கெடு முடிகிறது - விவசாயிகள் கவனத்திற்கு!
விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!
12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - முழு விபரம் உள்ளே!
Share your comments