Rubber Plant Benefits: கொரோனா நோய்த்தொற்றின் இந்த காலகட்டத்தில், வீட்டில் நாம் சுவாஸ்சிக்கும் காற்று சுத்தமானதாக இருப்பது மிகவும் முக்கியம். இத்தகைய சூழ்நிலையில், மக்கள் விலையுயர்ந்த காற்று சுத்திகரிப்பு ( Air Purifier) இயந்திரங்களை வீட்டில் வைத்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் விரும்பினால், ரப்பர் செடியின்(Rubber Plant) உதவியுடன் உங்கள் வீட்டின் காற்றை கலப்படம் இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க முடியும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஆமாம், ரப்பர் செடி மிகவும் அழகான தாவரமாகும், இது சுற்றுச்சூழலில் இருக்கும் மாசுபட்ட காற்றை சுத்தப்படுத்தும் மிகப்பெரிய திறனைக் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அதன் அழகான அமைப்பு உங்கள் வீட்டின் அழகையும் மேம்படுத்தும். இந்த கன்றுகள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது தோல் பிரச்சினைகளை சரிசெய்வதில் மிகவும் நன்மை பயக்கும். அதனை நீங்கள் வீட்டிலேயே எளிதாக பராமரிக்கலாம். வீட்டில் ரப்பர் கன்றுகள் வளர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் நமக்கு கிடைக்கும் பிற நன்மைகளையும் கொள்ளலாம்.
மரம் செடிகளை தொட்டாலோ அருகில் இருந்தாலோ ஒவ்வாமை ஏற்படத் தொடங்கும் பலர் உள்ளனர், ஆனால் ரப்பர் கன்றுகளின் மிகப்பெரிய அம்சம் என்னவென்றால், அதைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு எந்தவிதமான ஒவ்வாமையும் ஏற்படாது. இது பல தோல் நோய்களையும் குணப்படுத்தும். இது ஆயுர்வேத மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
காற்றை சுத்திகரிக்கிறது
வீட்டின் அழகை மேம்படுத்துவதோடு, வீட்டிற்கு தூய்மையான காற்றையும் தருகிறது. தூசி ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள், இந்த கன்றுகளை தங்கள் வீட்டில் நடவு செய்ய வேண்டும். உண்மையில் ரப்பர் கன்றுகள் வீட்டு அறையை ஈரப்பதத் தன்மையோடு வைத்திருக்கிறது. இது அறையில் இருக்கும் தீங்கு விளைவிக்கும் தூசி துகள்களை உறிஞ்சிவிடும். இது ஆஸ்துமா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தையும் குறைக்கும்.
பராமரிக்க எளிதானது
பிஸியான வாழ்க்கையில், கன்றுகளை பராமரிக்க குறைந்த நேரம் கிடைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கும் குறைவான நேரம் இருந்தால், இந்த சேடி உங்களுக்கு சிறந்தது. அதை பராமரிக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியதில்லை. ஒரு முறை தண்ணீர் ஊற்றி மாதங்களுக்கு அதை விட்டுவிடலாம்.
எளிதாக வளரும்.
நீங்கள் ரப்பர் கன்றின் அடிப்பகுதியில் இருந்து சில இலைகளை வெட்டி மற்றொரு ஈரமான தொட்டியில் நட்டு சில நாட்களுக்கு விட்டுவிட்டால், மிக விரைவில் உங்கள் பானையில் பல ரப்பர் கன்றுகள் தோன்றும்.
ஆந்தி-அழற்சி பண்புகள் (anti inflammatory properties)
ரப்பர் கன்றில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக உள்ளன, இது சரும பிரச்சினையை அகற்ற மிகவும் நன்மை பயக்கும். இந்த செடியின் 2-3 புதிய இலைகளை நீங்கள் அரைத்து தோலில் தடவினால், உங்கள் தோல் பிரச்சினை உடனடியாக சரி ஆகிவிடும்.
(Disclaimer: இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. கிருஷி ஜாகரன் இதை எதையும் உறுதிப்படுத்தவில்லை. அவற்றைச் செயல்படுத்தும் முன் சம்பந்தப்பட்ட நிபுணரைத் தொடர்பு கொள்ளவும்.)
மேலும் படிக்க
கருப்பு கவுனி அரிசியின் நம்பமுடியாத நன்மைகள்
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலிக்கு வெந்தயம் தீர்வு
நார்த்தங்காயில் இருக்கும் நோய் எதிர்ப்பு பலன்கள்
நீரிழிவு பிரச்சனைக்கு அப்போதே கோவைக்காயை மருந்தாக கூறிய அகத்தியர்!!!
Share your comments