அளவுக்கு அதிகமாகக் குங்குமப்பூவை உட்கொண்டால், நம் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவுக்கு பக்கவிளைவுகளைக் கொண்டுள்ளது.
குங்குமப்பூ (Saffron)
குங்குமப்பூ... இந்த வார்த்தைப் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் பரிச்சயப்பட்ட ஒன்று, ஏனெனில் சிவப்பான, அழகானக் குழந்தைக்குப் பெற்றோராக நினைக்கும், எல்லா ஆண்களும், பெண்களும், குங்குமப்பூ பக்கம் ஈர்க்கப்படுவது உறுதி.
பார்ப்பதற்கு மிகச்சிறியதாகக் காணப்படும் குங்குமப்பூவை கர்ப்பிணிகள் சாப்பிட்டால் பிறக்கப்போகும் குழந்தை சிவப்பாக, அழகாகப் பிறக்கும் என்பது நம்பிக்கை.
பக்கவிளைவுகள் (Side effects)
ஆனால் அழகு என்றைக்கும் ஆபத்தானது என்பதை நாம் பல நேரங்களில் உணர மறந்துவிடுகிறோம். அந்தவகையில் குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்களும், இதய நோயாளிகளும் குங்குமப்பூவைத் தவிர்க்க வேண்டும். அப்படி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
குங்குமப்பூ (Saffron)
உலகில் விலை உயர்ந்த நறுமண பொருட்களில் ஒன்றாகக் குங்குமப்பூக் கருதப்படுகிறது. ஒரு பவுண்டு அதாவது 454 கிராம் குங்குமப்பூ உற்பத்தி செய்வதற்கு 750 குங்குமப்பூ இதழ்கள் தேவைப்படுகின்றன. அதனால் அதன் விலையும் எப்போதுமே அதிகம்மதான். இந்தக் குங்குமப்பூ பல்வேறு மருத்துவப் பயன்களை கொண்டது.
அருமருந்து
ஆஸ்துமா, இருமல், தொண்டை வலி, தூக்கமின்மை, புற்றுநோய், தமனி பாதிப்பு, வாந்தி, வாயு தொந்தரவு, மனச்சோர்வு, பதற்றம், அல்மைசர் போன்ற நோய் பாதிப்புகளுக்கு மருந்தாக குங்குமப்பூ விளங்குகிறது. மாதவிடாய் பாதிப்புகளுக்கு நிவாரணியாகவும் திகழ்கிறது.
புற்றுநோய் (Cancer)
வெந்நீரில் ஐந்து குங்குமப்பூ பிசிறுகளை போட்டு 10 நிமிடங்கள் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் பருகலாம். குங்குமப்பூவுக்கு புற்றுநோய் செல்களை அழிக்கும் ஆற்றல் உண்டு. மனநிலையை மாற்றவும் செய்யும்.
கூந்தல் ஆரோக்கியம் (Hair health)
சரும பளபளப்புக்கும் குங்குமப்பூ உதவும். கூந்தலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தொடர்ந்து குங்குமப்பூ குடிநீர் பருகி வந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
பளிச் பக்கவிளைவுகள் (Flash side effects)
ஆனாலும் குங்குமப்பூவை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அப்படி உட்கொண்டால் பக்கவிளைவுகள் ஏற்படும்.
தலைசுற்றல், வயிற்றுப்போக்கு, வாந்தி, கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற பாதிப்புகளைச் சந்திக்க நேரும்.
உயிருக்கே ஆபத்து (Danger to life)
ஒரே நேரத்தில் 12 முதல் 20 கிராம் குங்குமப்பூ சாப்பிட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
குறைந்த ரத்த அழுத்தம் கொண்டவர்களும், இதய நோயாளிகளும் குங்குமப்பூவைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும் அதிகமாக உட்கொள்ளக்கூடாது. அனைத்து தரப்பினரும் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று குங்குமப்பூவைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் படிக்க...
இன்று மெகா தடுப்பூசி முகாம்; தமிழகத்தில் 20 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த திட்டம்!
வருமான வரி தாக்கல் செய்வதில் தொடரும் சிக்கல்: காலக்கெடு நீட்டிப்பு!
Share your comments