தினமும் எளிதாகவும், விலை மலிவாகவும் கிடைக்கக்கூடிய ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகளில் ஒன்று கேரட். இயற்கையாகவே இனிப்பான சுவை கொண்ட கேரட்டை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். இந்த கேரட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைப்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.
கேரட்டின் பயன்கள் (Benefits of Carret)
- கேரட்டிலுள்ள பீட்டா கரோட்டின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது; குடல் புண் வராமல் தவிர்க்கிறது.
- கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்து இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது.
- இதில் அதிகளவில் பொட்டாசியம், நார்ச்சத்துகள் உள்ளன; மலச்சிக்கல் வராமல் தவிர்க்கிறது.
- கேரட்டில் அதிகளவில் உள்ள வைட்டமின் ஏ சத்தானது, கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்கிறது.
- கேரட் சாறுடன், சிறிதளவு இஞ்சி சாறு கலந்து குடித்தால் வாயுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
- தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டால் மூட்டு வலியில் இருந்து விடுபடலாம். ஏனெனில், இதில் உள்ள வைட்டமின் சி எலும்புகளை வலுவாக்கும்.
- ஒரு டம்ளர் கேரட் சாறுடன் சிறிது ஏலக்காய் பொடி, பனங்கற்கண்டு சேர்த்து காலையில் குடித்து வர, உடல் சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். மேலும் உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது.
- கேரட்டில் உள்ள சத்துக்கள் உடலின் தோலுக்கு பொலிவைக் கொடுக்கிறது.
கேரட் ஜூஸ் (Carret Juice)
குறைவான கலோரி கொண்ட கேரட் ஜூஸை தினசரி குடித்து வந்தால், தொப்பைக் கொழுப்பை குறைக்க முடியும் என்பது ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரை.
கேரட் ஜூஸ் உடல் மெட்டாபாலிசத்தை தூண்டி உடற்பயிற்சி செய்யும் திறனை அதிகரிக்கிறது. இதனால் அதிகப்படியான தேவையற்ற கொழுப்பை குறைக்க முடியும். இதற்கு கேரட்டில் உள்ள வைட்டமின் பி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.
கேரட் ஜூஸில் வைட்டமின் பி வகைகளான வைட்டமின் பி1, பி2 மற்றும் பி6 போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. வைட்டமின் பி கொழுப்பு மற்றும் புரோட்டீன் மெட்டபாலிசத்துக்கு உதவுகிறது.
இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் கேரட் உதவுகிறது. மிக எளிதாக கிடைக்கும் கேரட்டை நாம் தினந்தோறும் உண்டு, மகிழ்வோடு வாழ்வோம்.
மேலும் படிக்க
கருஞ்சீரகத்தின் அளப்பரிய மருத்துவப் பயன்கள் இதோ!
நரம்புத் தளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நாட்டு வைத்தியம்!
Share your comments