மனிதர்களின் வியர்வையை வைத்து உடல்நலனை கண்டறியும் ஸ்மார்ட் நெக்லஸை அமெரிக்காவின் ஓகியோ பல்கலை விஞ்ஞானிகள் குழு உருவாக்கி உள்ளனர். சயின்ஸ் அட்வான்ஸஸ் இதழில் வெளியாகி உள்ள கட்டுரையில், ஓகியோ பல்கலை குழுவினர் பேட்டரி எதுவும் இன்றி இயங்கும் வயர்லெஸ் ஸ்மார்ட் நெக்லஸ் ஒன்றை காட்சிப்படுத்தி உள்ளனர். மனிதர்கள் உடற்பயிற்சி செய்யும் போது, அவர்களின் ரத்தத்தில் கலந்துள்ள சக்கரை அல்லது குளுக்கோஸ் அளவை, இந்த பயோ கெமிக்கல் சென்சாரால் உருவாக்கப்பட்ட நெக்லஸ் மூலம் அறிய முடியும்.
உடல் ஆரோக்கியம் (Healthy)
கழுத்தில் அணியக்கூடிய வகையில் உருவாக்கியுள்ள இந்த நெக்லஸை, அணிந்து உடற்பயிற்சி செய்யும் பொழுது, உடலின் குளுக்கோஸ் அளவை கண்காணிக்கும். பயோகெமிக்கல் சென்சார் என்பதால், பேட்டரிக்குப் பதிலாக அதிர்வு சுற்றுகளைப் பயன்படுத்தி செயல்படுகிறது. இது அனுப்பும் ரேடியோ அலைவரிசை சமிக்ஞைகளை வெளியில் இருந்து கருவியில் அறியலாம்.
ஸ்மார்ட் நெக்லஸ் ஆய்வின் இணை ஆசிரியரும், ஓஹியோ பல்கலை உதவி பேராசிரியருமான ஜிங்குவா லீ கூறுகையில், ஆய்வில் பங்கேற்றவர்கள் 30 நிமிடங்களுக்கு, சைக்கிள் ஓட்டுதலை மேற்கொண்டனர், பின்னர் சர்க்கரை கலந்த பானங்கள் அருந்தினர். பானங்களை அருந்திய பிறகு வியர்வையில் குளுக்கோஸ் அளவு உயருமென்பதை ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருந்தனர். ஆனால் அதை புதிய சென்சார் பதிவு செய்கிறதா என்பது கேள்வியாக இருந்தது. ஆனால் முடிவுகளில் சென்சார் குளுக்கோஸ் அளவை வெற்றிகரமாகக் கண்காணித்ததாகக் காட்டியது. இது வியர்வையில் உள்ள மற்ற முக்கியமான ரசாயன மாற்றங்களை கண்காணிக்க வேலை செய்யுமென நிரூபித்தது.
பயோசென்சர்கள் (Bio-Sensors)
உண்மையில் வியர்வையில் நூற்றுக்கணக்கான பயோமார்க்ஸர்கள் உள்ளன. அவை நமது உடல்நலம் பற்றிய மிக முக்கியமான தகவல்களை வெளிப்படுத்த முடியும். அடுத்த தலைமுறை பயோசென்சர்கள் மிகவும் உயிர்-உள்ளுணர்வு மற்றும் அறிமுகம் என்பதே தேவை இல்லாததாக இருக்கும். ஒரு நபரின் உடல் திரவங்களில் உள்ள முக்கிய தகவல்களை நாம் கண்டறிய முடியும்.
பயோமார்க்ஸ் என்பது உடலின் ஆழமான இரகசியங்களை வெளிப்படுத்தக்கூடிய ஒன்றாகும். நோய், தொற்று மற்றும் உணர்ச்சி அதிர்ச்சிக்கான சான்றுகள் அனைத்தும் ஒரு நபரின் உடல் திரவங்களில் காணப்படுகின்றன. இதில் வியர்வை, கண்ணீர், உமிழ்நீர் மற்றும் சிறுநீர் ஆகியவை அடங்கும். வியர்வையின் கலவையை பகுப்பாய்வு செய்வதோடு, இந்த சென்சார் ஒருநாள் உயிரி இம்ப்லான்ட்களாகத் தனிப்பயனாக்கப்பட்டு நரம்பியல் கடத்தி மற்றும் ஹார்மோன்களைக் கண்டறியப் பயன்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இது இரண்டாம் நிலை மூளை தொடர்புடைய செரிப்ரோஸ்பைனல் திரவத்தில் அயனி கோளாறுகளை அடையாளம் காண உதவும். மேலும் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். கூடுதலாக இந்த ஸ்மார்ட் நெக்லஸ், வேலை செய்ய குறைந்தபட்ச அளவு வியர்வை மட்டுமே தேவைப்படுகிறது.
மேலும் படிக்க
ஓவரா யோசித்து கவலை கொள்பவரா நீங்கள்: இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்!
Share your comments