கரும்பை விரும்பாத உள்ளங்களே இல்லை எனலாம். பெரும்பாலானோர் கரும்பைக் கடித்துச் சாப்பிடுவதை விரும்பினால், சிலர் கரும்பு ஜூஸ் குடிப்பதை விரும்புவார்கள். ஏனெனில், கரும்பு ஜூஸ் எல்லா சீசனிலும் கிடைக்கும். ஆனால் பொங்கல் பண்டிகையின்போது மட்டுமே நாம் கடித்து ருசிபார்க்கும் கரும்பு கிடைக்கும்.
அந்த வகையில், கரும்பு ஜூஸ் குடிப்பதால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக உடல் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
சாலையோரங்களில் மிக எளிதாக கிடைக்கும் கரும்புச் சாறில் பல நன்மைகள் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ!
-
கரும்புச்சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
-
பல நோய்களுக்கு எதிராக உடல் சண்டையிடவும் உதவுகிறது.
-
கரும்புச்சாறு மஞ்சள் காமாலை, இரத்த சோகையை தடுக்க உதவும்.
-
சத்துக்கள் அதிகம் உள்ள கரும்பு, பல வழிகளில் நமக்கு பலன் தரும்.
-
கரும்பு குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் கோடையில் குளிர்ச்சியையும் தருகிறது.
-
இனிப்புச் சுவை இருந்தாலும், கரும்புச் சாறு ஒப்பீட்டளவில் குறைந்த கொழுப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளது.
-
கரும்புச்சாறு எலுமிச்சை மற்றும் லேசான கல் உப்பைக் கலந்து குடித்தால், அது உடலுக்கு மேலும் ஆற்றலை அளித்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
-
கரும்பிலும் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. கரும்புச்சாறு மஞ்சள் காமாலை, இரத்த சோகை மற்றும் அசிடிட்டியைத் தடுக்க உதவும். கரும்புச்சாறு உடலை குளிர்வித்து இரைப்பை பிரச்சனைகளை போக்குகிறது.
-
கரும்பு நம் உடலில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே உங்களுக்கு நீரிழிவு இருந்தால் கரும்புச்சாறு குடிப்பது பாதுகாப்பானது. கரும்பு சாறில், இயற்கை இனிப்புகள் உள்ளன.
-
இது நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பருக்களை நீக்குகிறது
கரும்புச் சாறு முகப்பருவில் இருந்து விடுபட உதவும். கரும்பில் அதிக அளவு சுக்ரோஸ் உள்ளது, இது காயத்தை குணப்படுத்த உதவுகிறது. இது முகத்தில் உள்ள புள்ளிகளை நீக்கி, உடலில் உள்ள நச்சுத்தன்மையை சுத்தப்படுத்துகிறது.
எலும்பு வலிமை
கரும்பு சாற்றில் கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது – இந்த பொருட்கள் அனைத்தும் எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
எடையைக் குறைக்கிறது
கரும்பில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது, இது எடை குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள ஆபத்தான கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, எடையைக் கட்டுக்குள் வைத்து, இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும்.
தோல் பராமரிப்பு
கோடை காலத்தில் கடுமையான சூரிய ஒளி மற்றும் வியர்வையால் சருமம் பொலிவை இழக்கிறது. கரும்புச்சாறு சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.
கல்லீரல்
கல்லீரலுடன் தொடர்புடைய நோய்களை அகற்றுவதன் மூலம் கல்லீரல் திறம்பட செயல்பட உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
கரும்புச் சாறு குடிப்பதால் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக உடல் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
மேலும் படிக்க...
சர்க்கரை ரொம்பப் பிடிக்குமா? புற்றுநோய்க்கு வாய்ப்பு அதிகம்!
Share your comments