Benefits of Red Banana
முக்கனிகளில் ஒன்று வாழைப்பழம். வாழைபழத்தில் பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமான சத்துக்களைக் அளிக்கின்றன. பொதுவாக வாழைப்பழத்தில் இருக்கும் எல்லா நன்மைகளையும் கொண்டிருந்தாலும், செவ்வாழை, தனது கூட்டத்தின் ராஜா என்றே அழைக்கப்படும் அளவுக்கு பல நன்மைகளைக் கொண்டுள்ளது.
செவ்வாழை பழத்தில் உள்ள சத்துக்களை என்ன முடியாது. வாழைப்பழத்தில் பல வகைகளில், சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும், இரும்புச்சத்தும் காணப்படுகிறது. இந்த சிறப்பான செவ்வாழையில் உள்ள மருத்துவ குணங்கள் எவை என்பது பற்றி பார்க்கலாம்.
- செவ்வாழைப்பழத்தில் கால்சியம் நிறைவாக இருப்பதால் கர்ப்பிணிகளுக்கு கொடுப்பது நல்லது. தாய்க்கும் சிசுவுக்கும் தேவையான கால்சியம் போதுமான அளவு கிடைப்பதை உறுதி செய்ய வாழைப்பழம் பெரும் பங்கை வகிக்கிறது.
- செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் (beta carotene) கண் நோய்களை குணமாக்கும் வல்லமை கொண்டுள்ளது. செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதில் வைட்டமின் சி அதிகம் காணப்படுகிறது.
- செவ்வாழையில் 50 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ஆண்டி ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ள செவ்வாழையை மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்கு பிறகு தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டுவந்தால் மாலைக்கண் நோய் விரைவில் குணமாகும்.
- பல் வலி உள்ளிட்ட பலவகையான பல் பிரச்சனைகளையும் (dental diseases) குணமாக்குக்ம் திறன் செவ்வாழைப் பழத்திற்கு உள்ளது. பல்வேறு சரும நோய்களுக்கும் செவ்வாழை சிறந்த நிவாரணியாக. எந்த விதமான தோல் பிரச்சனை இருந்தாலும், செவ்வாழை பழத்தை தொடர்ந்து 7 நாட்கள் உட்கொண்டுவந்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
- நரம்பு தளர்ச்சியை போக்கும் திறன் கொண்ட செவ்வாழையை சாப்பிட்டால், ஆண்மை குறைபாடு நீங்கி விடும். தொடர்ந்து 48 நாட்கள் இரவு நேரத்தில் செவ்வாழை சாப்பிட்டால் நரம்புகள் பலம் பெற்று, ஆண்மை தன்மை அதிகரிக்கும்.
- தொற்றுநோய் கிருமிகளை அழிக்கும் அரிய சக்தி கொண்ட செவ்வாழையை வாரம் ஒரு முறை உட்கொண்டு வந்தால் உடலில் தொற்று நோய் பாதிப்பு கட்டுப்படும். தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் குறைபாடுகள் ஏற்படாது.
கல்லீரல் வீக்கம் (liver inflammation) மற்றும் சிறுநீர் பிரச்சனைகள் (urinary problem) சீராக்கும் சக்தி கொண்ட செவ்வாழையை சாப்பிட்டால் ஆரோக்கியம் நீடித்து நிலைக்கும். எந்த வயதினராக இருந்தாலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்கள், செவ்வாழைப்பழத்தை 21 நாட்கள் உட்கொண்டு வந்தால், கண் பார்வையில் தெளிவு ஏற்படும்.
மலச்சிக்கல் மற்றும் மூலநோய் பிரச்னைகள் உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை உட்கொண்டு வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம். எனவே, செவ்வாழையை அனைவருமே சாப்பிடலாம். யாரும் தவிர்க்க வேண்டிய அவசியமில்லை.
மேலும் படிக்க:
Share your comments