தற்போது Peanut Butter எனப்படும் வேர்கடலையின் பட்டர் மிகவும் பிரபலமாக உள்ளது. வேர்க்கடலையுடன் உப்பும், இனிப்பும் கலந்த இதனது சுவை ருசிக்க அற்புதமாக இருக்கும். இதில் இருக்கும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால் நாம் கடைகளில் வாங்கும் வேர்க்கடலை பட்டரில் ப்ரெசர்வேடிவ்ஸ் (Preservatives) கலந்துள்ளதால் நன்மைகள் குறைவு என்பது குறிப்பிடதக்கது. எனவே நாம் வீட்டிலேயே செய்யக்கூடிய ஹோம் மேட் வேர்க்கடலை ரெசிபியை, இந்தப் பதிவில் காணலாம்.
இது குழந்தைகள் முதல் பெரியோர்களும் உண்ணலாம்.
இதற்கு தேவையான பொருட்கள்
வேர்க்கடலை | 1 ½ கப் |
கடலை எண்ணெய் | 2 டேபிள் ஸ்பூன் |
தேன் | 2 டேபிள் ஸ்பூன் |
உப்பு | 2 டீ ஸ்பூன் |
செய்முறை
- வேர்க்கடலையினை வெறும் வாணலியில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்களுக்கு நன்றாக வறுத்துக் கொள்ளவும். வேர்க்கடலை கருகாமல் இருக்க இடைவிடாமல் வறுக்க வேண்டும்.
TNPSC group 4: VAO தேர்வுக்கான சிலபஸ் மாற்றம்! லிங்க் இதோ
- வேர்க்கடலை சூடாக இருக்கும்பொழுதே டவலால் நன்றாக உரசி தோலை அகற்றவும், இவ்வாறு செய்வது எளிமையாக இருக்கும். கம்பி சல்லடையை பயன்படுத்தி மீதமுள்ள தோலினை அகற்றிக் கொள்ளுங்கள்.
- வேர்க்கடலை சற்று வெது வெதுப்பாக இருக்கும் பொழுதே அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பவுடராகும் வரை நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள்.
- மிக்ஸியில் மேலும் ஒரு நிமிடத்திற்கு பவுடரை நன்றாக அரைக்க வேண்டும். ஒதுங்கும் பவுடரை எடுத்துப் போட்டு அரைக்கவும்.
- மிக்ஸியை மேலும் ஒரு நிமிடத்திற்கு தொடர்ந்து அரைக்கவும். நிறுத்தி கலவையை ஒதுக்கவும். இப்பொழுது பட்டர் ஓரளவு ரெடியாகி இருக்கும்.
- இப்பொழுது மிக்சியை மேலும் ஒரு நிமிடத்திற்கு அரைக்கவும். இப்பொழுது கலவை பட்டர் பதத்திற்கு வந்து இருக்கும். அதில் எண்ணெய், உப்பு மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளவும்.
கால்நடைகள் வளர்த்தால் நிதி உதவி: அழைக்கிறது மத்திய அரசு!
- மேலும் 1 முதல் 2 நிமிடத்திற்கு பட்டர் பதத்திற்கு வரும்வரை அரைக்க வேண்டும். இப்பொழுது வேர்க்கடலை பட்டர் ரெசிபி ரெடி.
- இதை நீங்கள் காற்று புகாத டப்பாவில் அடைத்து பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.
- இதனுடன், சாக்லேட் சுவை விரும்பும் மக்கள், கோகோ பவுடர் சேர்த்துக்கொள்ளலாம்.
சக்தி, புரதம், தையாமின், பாஸ்பரஸ், நையாசின், காப்பர் வைட்டமின்-இ ஆகிய முக்கிய சத்துக்கள் கொண்ட அற்புத மருத்துவக் குணத்துடன் விளங்குகிறது, வேர்க்கடலை. பல தொற்றுநோய்கள், ஹெபடைடிஸ், காசநோய் ஆகியவற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றிக்கொள்ளத் தேவையான எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. இதில் உப்பு மற்றும் தேன் கலந்திருப்பதால் குழந்தைகளுக்கு 1 வருடத்திற்கு பிறகு கொடுக்க ஆரம்பிக்கலாம்.
மேலும் படிக்க:
ரேஷன் கடைகளில் விரைவில் பாக்கெட்டுகளில் அரிசி, சர்க்கரை விநியோகம் - அமைச்சர் சக்கரபாணி
Share your comments