1. செய்திகள்

தேசிய கல்விக் கொள்கை தமிழ் மாணவர்களுக்கு நன்மை பயக்குமா?

Poonguzhali R
Poonguzhali R
National Education Policy: Will Benefit Tamil Students?

தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக, தொழில்நுட்பம் மற்றும் மருத்துவப் படிப்புகளை உள்ளூர் மொழிகளில் கற்க இயலும் என்றும், இதன் மூலம் தமிழக இளைஞர்கள் பயனடைவார்கள்” என்று பிரதமர் கூறியிருக்கிறார்.

தமிழகத்தில் வியாழன் அன்று நிகழ்ந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்தியப் பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயமாக இந்நிகழ்வு அமைந்திருப்பதாகக் கூறிய பிரதமர், தமிழகத்தின் சாலை அமைப்பதில் மத்திய அரசின் கவனம் தெளிவாகத் தெரிகிறது என்றார். பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை, சென்னை துறைமுகத்தை மதுரவாயல் வரை இணைக்கும் நான்கு வழிச்சாலை, நெல்லூரை தருமபுரி மற்றும் மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை விரிவாக்கம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, “பொருளாதாரச் செழிப்புடன் மாநில அரசுகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால் இன்னும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன எனக் கூறியுள்ளார்.

 

எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு 5 ரயில் நிலையங்கள் மறுவடிவமைப்பு செய்யப்படுவது குறித்து மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். அவர்கள் உள்ளூர் கலை மற்றும் கலாச்சாரத்துடன் இணைவார்கள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (நகர்ப்புற) திட்டத்தின் கீழ் பெரும்பாக்கத்தில் லைட் ஹவுஸ் திட்டம் குறித்து, சென்னையில் முதல் திட்டம் நிறைவேற்றப்பட்டதில் இருந்து இந்த திட்டம் திருப்திகரமாக இருப்பதாக மோடி கூறியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து தேசியக் கல்விக் கொள்கைக்குத் (NEP) தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்ததன் பின்னணியில், நரேந்திர மோடி NDA அரசாங்கத்தின் தேசியக் கல்விக் கொள்கை (NEP) என்பது இந்திய மொழிகளை ஊக்குவிப்பதில் சிறப்பு முக்கியத்துவம் அளித்தது என்பதை வலுப்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதோடு, “தேசிய கல்விக் கொள்கையின் காரணமாக, தொழில்நுட்ப மற்றும் மருத்துவப் படிப்புகளை உள்ளூர் மொழிகளில் படிப்பதற்கு ஏதுவாய் அமையும் எனவும், இதன் மூலம் தமிழக இளைஞர்கள் பயனடைவார்கள்” எனவும் பிரதமர் கூறியிருக்கிறார்.

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும், சென்னை துறைமுகத்தைப் பொருளாதார வளர்ச்சியின் மையமாக மாற்றும் நோக்குடன் சென்னையில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. நாட்டின் பிற பகுதிகளிலும் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பூங்காக்களை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது, என்றார். “பல்வேறு துறைகளில் உள்ள இந்தத் திட்டங்கள் ஒவ்வொன்றும் வேலை வாய்ப்பு உருவாக்கத்தையும், ஆத்ம நிர்பார் என்ற நமது உறுதியையும் அதிகரிக்கும்,” என்று கூறியிருக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சி என்பது பொருளாதாரம் மட்டுமல்ல, சமூக நீதி, பெண்கள் மேம்பாடு மற்றும் சமத்துவம் ஆகியவற்றால் மட்டுமே தமிழ்நாடு தனித்துவம் வாய்ந்தது என்றார்.

மேலும் படிக்க

பசுமை குழு: திருச்சியைப் பசுமை திருச்சியாக மாற்ற முடிவு

மாதம் ரூ. 30,000 லாபம் தரும் காடை வளர்ப்பு

English Summary: National Education Policy: Will Benefit Tamil Students? Published on: 27 May 2022, 04:46 IST

Like this article?

Hey! I am Poonguzhali R. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.