1. வாழ்வும் நலமும்

இது போன்ற எண்ணெய் சருமத்தை இவ்வாறு கவனித்துக் கொள்ளுங்கள்

Sarita Shekar
Sarita Shekar
oily skin

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும்.  ஏனெனில் இந்த வகை சருமத்தில் எண்ணெய் இருப்பதால், முகத்தில் பிசுபிசுப்பு தன்மை ஏற்படும். இதன் காரணமாக dark spot (டிராக் ஸ்பாட்ஸ்) போன்ற பிரச்சினைகள் வருவது பொதுவானது.

ஒவ்வொரு வகை சருமத்திற்கும் தனி கவனிப்பு தேவை என்றாலும், நாம் (oily skin) எண்ணெய் சருமத்தைப் பற்றி பேசினால், கூடுதல் கவனிப்பு தேவை. ஏனென்றால், இந்த வகை சருமத்தில் எண்ணெய் இருப்பதால், முகம் பிசுபிசுப்பாக இருக்கும். உங்கள் சருமத்தில் இருக்கும் துளைகள் அதாவது skin pores மூடப்பட்டிருக்கும். மேலும் முகப்பரு மற்றும் dark spots கரும்புள்ளிகள் போன்ற பிரச்சினைகள் இருப்பது பொதுவானது. உங்கள் சருமமும் எண்ணெய் நிறைந்ததாக இருந்தால், அதை கவனித்துக்கொள்ள நீங்கள் Herbal Steam Facial  ஃபேசியல் அதாவது உதவியை பெறலாம். Herbal Steam Facial  ஃபேசியல் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

பச்சை தேநீர் ஃபேசியல் (green tea steam facial)

உங்கள் எண்ணெய் சருமத்தை மேம்படுத்த கிரீன் டீ  ஃபேசியல் green tea steam facial  உதவியை நீங்கள் எடுக்கலாம். இதற்காக, நீங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து, கிரீன் டீயுடன் சிறிது சர்க்கரை மற்றும் சிறிது மஞ்சள் கலக்கவும். இப்போது தண்ணீரை இன்னும் ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்த பின்னர் அதை அடுப்பிலிருந்து இரக்கி வைக்கவும். இப்போது உங்கள் முகத்தை ஒரு துண்டுடன் மூடி, இந்த நீரிலிருந்து ஐந்து முதல் ஏழு நிமிடம் வரை ஆவி பிடித்து கொள்ளுங்கள். இதற்குப் பிறகு, நீராவி எடுத்து உங்கள் முகத்தை ஒரு துண்டு கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது உங்கள் சருமத்தை பளபளப்பாக்கும். கிரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது உங்கள் சருமத்தை பளபளப்பாக்குவதோடு வெயில் மற்றும் tanning போன்ற பிரச்னைகளையும் குறைக்க உதவும். இதனுடன், ஆண்டிபயாடிக் மருந்தாக மஞ்சள் முகப்பருவை ஏற்படுத்தும் மற்றும் பாக்டீரியாக்களை அகற்ற உதவும். அதே நேரத்தில், இலவங்கப்பட்டையில் இருக்கும் செப்டிக் எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் தோல் துளைகளுக்குள் ஆழமாகச் சென்று எண்ணெய் அதிகப்படியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் சிறப்புப் பங்கு வகிக்கும்.

லாவெண்டர்  ஃபேசியல் (Lavender Steam Facial)

உங்கள் எண்ணெய் சருமத்தின் கூடுதல் கவனிப்புக்காக லாவெண்டர்  ஃபேசியல் உதவியையும் நீங்கள் பெறலாம். இதற்காக, முதலில் நீங்கள் ஒரு லிட்டர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது இந்த நீரில் லாவெண்டர் எண்ணெய் அல்லது அதன் இலைகளை நீரில் போடவும். இந்த தண்ணீரில் சில புதினா இலைகள் மற்றும் துளசி இலைகளையும் போடவும். இப்போது இந்த தண்ணீரை இன்னும் ஐந்து நிமிடம் வரை கொதிக்க விடவும். இதற்குப் பிறகு, இந்த தண்ணீரில் ஆவி பிடிக்கவும். பின்னர் முகத்தை சுத்தம் செய்யுங்கள். லாவெண்டர் எண்ணெய் உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும், அதே நேரத்தில் இது உங்கள் சருமத்தில் எண்ணெய் உற்பத்தியையும் கட்டுப்படுத்தும்.

இதனுடன், புதினா இலைகள் உங்கள் சருமத்தை உள்ளே இருந்து குளிர்விக்க உதவும். துளசி இலைகளில் வைட்டமின் ஈ உள்ளது, இது சருமத்தில் சிவத்தல் redness, தடிப்புகள் மற்றும் முகப்பரு ஆகியவற்றைக் குறைக்க உதவும்.

மேலும் படிக்க      

மூல நோய் தீர்க்கும் அருமருந்து- துத்தி இலையின் அதிசய குணங்கள்

வாய் புண்களால் கஷ்டப்படுரீங்களா ? இந்த 6 வைத்தியம் நிவாரணம் தரும்.

பல நோய்களுக்கு சிறந்த மருந்து கம்பு! இதை புறக்கணித்தால் வரும் வம்பு !!

English Summary: Take care of oily skin like this with steam Published on: 17 July 2021, 04:58 IST

Like this article?

Hey! I am Sarita Shekar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.