ராகி அதிக உயரத்தில் வளரும் தானிய வகையாகும். கடுமையான வானிலை நிலைகளை தாங்கக்கூடிய ஒரு கடினமான பயிர் ஆகும். இது இந்தியத் தட்பவெப்ப நிலைக்கு மிகவும் பொருத்தமானது. வட இந்தியாவில் ஃபிங்கர் மில்லட் அல்லது நச்னி என்று பிரபலமாக அறியப்படும் இந்த தானியமானது உண்மையில் ஆப்பிரிக்காவில் உருவானது எனக் கூறப்படுகிறது. அத்தகைய ராகியை உட்கொள்வதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகளைக் குறித்து இப்பதிவு விளக்குகிறது.
பழங்கால தானியங்கள் மீது இன்று அதிக ஆர்வம் காணப்படுகிறது. 1950 களுக்கு முன்பு, முழு தானியங்களானப் பார்லி, பிரவுன் அரிசி, அமராந்த் மற்றும் ராகி ஆகியவை நமது பாரம்பரிய உணவில் பிரதானமாக இருந்தன. அதன் பிறகு அரிசி முழுமையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. முழு தானியங்களில் நார்ச்சத்துள்ள தவிடு மற்றும் செயலாக்கத்தால் இழக்கப்படாத பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களுடன் இருப்பதால் அவை ஆரோக்கியமானவை. ராகி சமீபத்தில் மீண்டும் வந்த அத்தகைய முழு தானிய வகைகளுள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
ராகி நல்ல கார்போஹைட்ரேட்டின் நிறைந்த வளமான தானிய மூலமாகும். இது தற்காலத்தில் சப்பாத்தியாகவோ அல்லது காலை உணவுக்கான கஞ்சியாகவோ தினசரி உணவில் எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த பயனைத் தருகின்றது. இத்தகைய ராகியை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் பயன்களாக நிபுணர்கள் குறிப்பிடுவதைக் கீழே பார்க்கலாம்.
கால்சியம் நிறைந்தது: மற்ற தானியங்களுடன் ஒப்பிடும் போது ராகி மாவு கால்சியத்தின் சிறந்த ஆதாரங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள தேசிய ஊட்டச்சத்து கழகத்தின் கூற்றுப்படி, 100 கிராம் ராகியில் 344 மி.கி கால்சியம் உள்ளது. ஆரோக்கியமான எலும்புகள் மற்றும் பற்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் தடுப்புக்குக் கால்சியம் முக்கியமானது. இது எலும்புகளைப் பலவீனப்படுத்தும் ஒரு நோய். "வளரும் குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது: அரிசி, மக்காச்சோளம் அல்லது கோதுமையுடன் ஒப்பிடும்போது ராகியில் பாலிபினால்கள் மற்றும் உணவு நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உணவுப் பசியைக் குறைத்து, செரிமான வேகத்தைச் சீராகப் பராமரிக்கிறது. இதன் விளைவாக, இரத்த சர்க்கரையைப் பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்கும்.
தோலின் வயதை மாற்றுகிறது: ராகியானது, இளமையான சருமத்தைப் பராமரிக்க உதவியாக இருக்கிறது. இதில் உள்ள மெத்தியோனைன் மற்றும் லைசின் போன்ற முக்கிய அமினோ அமிலங்கள் தோல் திசுக்களில் சுருக்கங்கள் மற்றும் தொய்வு ஏற்படுவதை குறைக்கிறது.
இரத்த சோகையை எதிர்த்துப் போராடுகிறது: ராகி இயற்கை இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இதனால் இரத்தச் சோகை நோயாளிகளுக்கும், குறைந்த ஹீமோகுளோபின் அளவு உள்ளவர்களுக்கும் இது ஒரு வரப்பிரசாதமாகும். இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டத்தில் இரும்புச்சத்தை எளிதில் உறிஞ்சுவதற்கு வழிவகுக்கும்.
எடை இழப்புக்கு உதவுகிறது: அதிக அளவு உணவு நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரம்ப வைத்திருக்கிறது. அதோடு, தேவையற்ற பசியைத் தடுக்கிறது. இது பசியின்மை மற்றும் எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.
மேலும் படிக்க
Share your comments