1. வாழ்வும் நலமும்

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசிக் காரர்களுக்கு அதிர்ஷ்டம்
Tamil New Year is lucky for these 3 zodiac signs

பிறக்கக்கூடிய தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையும். எல்லா ராசிக்காரர்களுக்குமே, இந்த தமிழ் புத்தாண்டு நன்மை தரக்கூடிய புத்தாண்டாகத்தான் அமையும் என நம்புகிறோம். இருந்தாலும் நேரமும் காலமும் எல்லோருக்கும் ஒரே மாதிரி இருப்பது இல்லை அல்லவா. உங்கள் ராசியின்படி உங்களுடைய, இந்த தமிழ் வருடமான சோபகிருது பிறப்பு எப்படி இருக்கிறது என்று ஜோதிடர்கள் சில விஷயங்களை கணித்து சொல்லி இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதைப் படிக்கவும்.

இந்த 3 ராசிக்காரர்களுக்கான ராசி பலனை பார்த்து விடுவோம். தனுசு, மிதுனம், துலாம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு இந்த சோபக்கிருது ஆண்டு மிகப் பெரிய பொக்கிஷத்தை உள்ளே மறைத்து வைத்துக் கொண்டு பிறந்துள்ளது. நீங்கள் எதிர்பார்த்த நல்லது, எதிர்பாராத நல்லது என்று யோகங்கள் அடுத்தடுத்து உங்களுக்கு நடத்திக் கொண்டே இருக்கும், அதிர்ஷடம் உங்கள் வீட்டுக் கதவில் உள்ளது. மேலும் தனித்தனியே இவர்களின் சிறப்பு ராசிப் பலனை பார்க்கலாம்...

அதிர்ஷ்டசாலி ராசிக்காரர்களின் விரிவான பலன்:

தனுசு:

இந்த வருடம் தனுசு ராசிக்காரர்களுக்கு, நிறைய நற்பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கப் போகின்றது. நீங்கள் நினைத்ததை எல்லாம் செய்து முடிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். புதிய வேலை தேடலாம். புதிய வீடு கட்டலாம். திருமணம் செய்து கொள்ளலாம். 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வதற்கு உண்டான அனைத்து அம்சங்களும் உங்களுக்கு நிறைந்து இருக்கிறது.

மேலும் படிக்க: வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பதால் முகப்பரு சருமத்திற்கு நன்மையா?

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் அற்புதமான வருடமாக இருக்கப் போகின்றது. புதியதாக வீடு வண்டி வாகனம் ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் தங்களுக்கு மனதிற்கு பிடித்த பொருட்களை எல்லாம் வாங்கும் வாய்ப்பு கிட்டும். கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர போகிறீர்கள். எதிரி பிரச்சினையில் இருந்து வெளிவர போகிறீர்கள். உங்களால் அடுத்தவர்களுக்கு உதவும் அளவிற்கு வசதி வாய்ப்புகள் பெருகும்.

மிதுன:

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் நிறைய நன்மைகள் நடக்கவுள்ளது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது. சில பேருக்கு ராஜ யோகம் அடிக்கும் அளவிற்கு நிறைய வாய்ப்புகள் தேடி வரும். அடிச்சதுடா ஜாக்பாட் என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல், நீங்களே நினைக்காத பல நல்ல விஷயங்கள் உங்கள் குடும்பத்தில் நடக்கவுள்ளது. பெயர் புகழ் அந்தஸ்து பதவி என்று நீங்கள் கேட்காமலேயே உங்கள் வீடு தேடி வரும். சந்தோஷம் பல மடங்கு பெருகும்.

மேலும் படிக்க:

Baisakhi| Bohag Bihu| தமிழ் புத்தாண்டு| Vishu - இவை ஒரே நாளில் கொண்டாடப்படுவதின் காரணம்!!

விவசாயிகளுக்கு 'மைக்ரோ' ATM| TNAU விதை தர மேம்பாட்டுத் தொழில் நுட்பங்கள் குறித்து கட்டணப் பயிற்சி

English Summary: Tamil New Year is lucky for these 3 zodiac signs Published on: 14 April 2023, 04:16 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.