விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற சக மனிதர்கள்தான் வரவேண்டும் என்பதில்லை, அதற்கு நீங்கள் ஆப்பிள் வாட்ச் கட்டியிருந்தால் போதும்.
காப்பாற்றிய வாட்ச் (Saved watch)
ஏனெனில், சிங்கப்பூரில் சாலை விபத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து மயக்கமடைந்த நபரை ஆப்பிள் வாட்ச் காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களுக்கு பேருதவி செய்து வருகிறது என்பதே உண்மை. அந்தவகையில் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் ஒன்று, விபத்தில் சிக்கிய ஒருவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்திருக்கிறது என்றால் உங்களலால் நம்ப முடிகிறதா?.
எஸ்.ஓ.எஸ் வசதி (SOS facility)
ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். ஏனெனில், ஆப்பிள் வாட்சில் ஆபத்து காலங்களில் அவசர உதவி பிரிவுக்கு தகவல் தெரிவிக்கும் எஸ்.ஓ.எஸ் வசதி உள்ளது.
ஏதேனும் அவசர நிலை எனில் வாட்சில் உள்ள பட்டனை அழுத்துவதன் மூலம் அல்லது வாட்சில் தூண்டப்படும் அதிர்வுகளால் அவசர உதவி எண்களுக்கு இருப்பிடத்துடன் கூடிய தகவல் அனுப்பிவிடும்.
அந்தவகையில், சிங்கப்பூரில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முகமது பிட்ரி என்பவர் மீது வேன் ஒன்று மோதியது.இதில், நிலைத்தடுமாறி சாலையில் விழுந்த அவர் மயக்கமடைந்தார்.
அவசர உதவி (Emergency assistance)
விபத்தினால் உண்டான அதிர்வுகளால் முகமது பிட்ரியின் கையில் அணிந்திருந்த ஆப்பிள் வாட்சில் இருந்து அவசர உதவி எண்ணிற்கு தகவல் சென்றுள்ளது. அதன்மூலம் இருப்பிடத்தை அறிந்து, விபத்தில் இருந்து முகமது பிட்ரி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆபத்து நேரத்தில் உதவியதுடன் மயக்கமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதிக்க பெரிதும் உதவிய ஆப்பிள் வாட்ச்சிற்கு, முகமது பிட்ரி தன் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார்.
மேலும் படிக்க...
Share your comments