முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. மேலும், வாழைப்பழத் தோலில், உடலுக்குத் தேவையான மிக முக்கிய சத்துகள் ஏராளமாக நிரம்பியுள்ளது. அதனை இப்போது தெரிந்து கொள்வோம்.
வாழைப்பழத் தோல் (Banana peel)
வாழைப்பழத் தோல் சாப்பிடுவதற்கு ஏற்றது மட்டுமல்ல, அதில் ஏராளமான பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் உடலுக்குத் தேவையான அமினோ என பல சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும், மக்கள் அனைவரும் தேடி அலையும் ஆன்டிஆக்ஸைடு வாழைப்பழத் தோலில் அதிகம் நிறைந்துள்ளது. ஆகவே, வாழைப்பழத் தோலை சாப்பிடுவதால் இதய நோய், நீரிழிவு மற்றும் புற்றுநோய் என பல நோய்களை எதிர்க்கும் ஆற்றல் நமக்கு கிடைக்கிறது.
பயன்கள் (Benefits)
வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான டிரிப்டோபான் மற்றும் அதனுடன் வைட்டமின் பி6 கலந்திருப்பது, மன அழுத்தத்தைப் போக்கவும் மனநலப் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளியாகவும் அமைகிறது.
இதில் இருக்கும் பி6, நல்ல தூக்கத்திற்கு வித்திடும். எனவே மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளுக்கு உறக்கம் நல்ல மருந்தாக அமையும்.
நார்ச்சத்துக்கு நிறைந்த தோலை சாப்பிடுவதன் வாயிலாக, செரிமானக் கோளாறுகள் அறவே நீங்குகிறது. வயிற்று உபாதைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது.
எப்படி சாப்பிடலாம் (How to eat)
ஒருவர் வாழைப்பழத் தோலை சாப்பிடுவது என முடிவு செய்தால், நன்கு பழுத்த பழங்களை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இவை எப்போதும் இனிப்புச் சுவையுடன் தோல் மிக மெலிதாக இருக்கும். மேலும், எளிதாகவும் உரியும். அவ்வாறு உரித்த தோலை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த தோலை உங்களுக்குப் பிடித்த உணவுகளோடு, சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில், ரொட்டியில் ஜாம் தடவி சாப்பிடுவது போல கூட சாப்பிடலாம். அதனை சமைத்தும் கூட சாப்பிடலாம். வேக வைத்து, ஆவியில் வைத்து, நன்கு வறுத்து என எப்படி வேண்டுமானாலும் சாப்பிடும் படி, எளிதாக மாற்றி வாழைப்பழத் தோலை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் போதும்.
வாழைப்பழத் தோலை உணவுடன் சேர்த்துக் கொள்வதால், நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பதோடு, வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் பெருகும்.
மேலும் படிக்க
உணவில் உப்பைக் குறைத்துக் கொள்ளுங்கள்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!
ரேஷன் கடைகளில் இலவச கேழ்வரகு: மத்திய அரசிடம் உதவி கேட்கும் தமிழக அரசு!
Share your comments