1. வாழ்வும் நலமும்

பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகள்!

KJ Staff
KJ Staff
Benefits of Almonds
Credit : Tamil Wealth

பாதாம் பருப்பு (Almonds) மிகவும் சுவையானது. அப்படியே எடுத்துச் சாப்பிட்டால் அருமையான ருசி! பாதாமை ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் தான், உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.

பாதாமை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள் நிபுணர்கள். அதை இரவுமுழுக்க ஊறவைத்துவிட்டுக் காலையில் சாப்பிடுவதால் பல நன்மைகள் உண்டாம்.

நன்மைகள்:

  • நீரில் ஊறவைத்த பாதாமிலிருந்து லிபேஸ் என்கிற நொதி வெளி விடப்படுகிறது. இதனை உண்ணும்போது, நாம் சாப்பிட்ட மற்ற உணவுகள் எளிதில் செரிக்கின்றன.
  • உணவில் கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட்ரால் (Good cholesterol) என இரண்டு வகைகள் இருப்பதை அறிந்திருப்பீர்கள். அதில் கெட்டதைக் குறைத்து நல்லதை அதிகரிக்கும் குணம் ஊறவைத்த பாதாமுக்கு உண்டு. இது நமது உடல்நலத்துக்கு, குறிப்பாக இதயத்துக்கு நல்லது.
  • ஊறவைத்த பாதாமைச் சாப்பிட்டால் நமது இரத்தத்தில் ஆல்ஃபா டேகோபெரோல் என்கிற பொருள் அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும், இதேபோல் ஊறவைத்த பாதாமால் இரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுப்படும்
  • பாதாமில் உள்ள கொழுப்புகள் உடலுக்கு நல்லவை. இவை வயிற்றை நிரப்பிவிடுவதால், நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடமாட்டோம், உடல் எடை (Weight) குறையும்
  • கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு ஃபோலிக் அமிலம் (Folic acid) போதுமான அளவு கிடைக்கும்போது, குழந்தை ஆரோக்கியமாக வளர்கிறது, பிறப்புக் குறைபாடுகள் குறைகின்றன. இந்த ஃபோலிக் அமிலத்தை ஊறவைத்த பாதாம் வழங்குகிறது
  • இவற்றுடன், ஊறவைத்த பாதாமில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடென்ட்களால் இளமைத்தோற்றம் கிடைக்கும், இதிலுள்ள பி17 வைட்டமின் புற்றுநோயை (Cancer) எதிர்க்கும்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

மாடித் தோட்டம் குறித்து விழிப்புணர்வு வீடியோ! பிரபல பின்னணி பாடகர் புஷ்பவனம் குப்புசாமி அசத்தல்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வாசனை எண்ணெய்கள்!

English Summary: There are many benefits to soaking and eating almonds! Published on: 21 April 2021, 07:12 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.