1. வாழ்வும் நலமும்

‌வெந்தய கீரையில் இவ்வளவு நன்மைகளா: அவசியம் சாப்பிடுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Benefits of Fenugreek Leaves

வெந்தயம் என்பது மெத்தி என்ற பெயரில் இந்தியாவில் அழைக்கப்படுகிறது. அதன் விதைகள் மற்றும் அதன் இலைகள் நிறைய மருத்துவ குணங்கள் வாய்ந்ததாக உள்ளது. நமது உடம்பை குளிர்ச்சியாக வைப்பதற்கு வெந்தயம் மிகவும் உதவி புரிகிறது. இது எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற படி வளரும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை செடியாகும்.

மேலும் வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இந்த இரும்புச் சத்துப் உடலில் ஏற்படும் ரத்தசோகையை வராமல் தடுப்பதோடு உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.

பயன்கள் (Benefits)

வெந்தய கீரை புதிய பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்கிறது. பிரசவ வலி மற்றும் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலிகளை குறைக்கிறது. மேலும் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி, குடல் அலர்ஜி குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. கெட்ட சுவாசத்தை தடுக்கிறது.

வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை குடித்து வர நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால் விரைவாக குணமடையலாம். வெந்தயக் கீரையை வேகவைத்து, வெண்ணெயில் வதக்கிச் சாப்பிட்டால், பித்தத்தினால் வரும் மயக்கம் சரியாகும். பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்து சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.

வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும். மேலும் வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும்.

மேலும் படிக்க

வீட்டு வைத்தியத்தின் மூலம் பற்களை வெண்மையாக்கலாம் வாங்க!

கோடை வெயிலை வெல்ல மண்பானை தண்ணீரை குடியுங்கள்!

English Summary: There are so many benefits of Fenugreek Leaves: Eat necessarily! Published on: 13 March 2022, 09:05 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.