காய்கறிகளை தினந்தோறும் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு விதமான பலன்களை நமக்கு அளிக்கிறது. உடலில் இரத்த உற்பத்தி அதிகமாகி கொண்டே இருக்கும் என்பதால், ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டியது மிக அவசியம். உடலில் இரத்த உற்பத்திக்கு உதவும் காய்கறிகளில் மிக முக்கியமானது பீட்ரூட். இதுபோல், உடலில் இரத்த உற்பத்தியௌ அதிகரிக்கும் உணவுப் பொருட்கள் குறித்து இப்போது காண்போம்.
இரத்த உற்பத்திக்கு உதவும் உணவுகள்
- பீட்ரூட்டை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
- பேரிச்சம் பழத்தை, 3 நாட்களுக்கு தேனில் ஊற வைத்து, பின்னர் ஒரு வேளைக்கு 2 அல்லது 3 என சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்தம் ஊறும்.
- சீசன் பழமான நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், இதயத்திற்கு அதிக பலத்தைக் கொடுப்பதுடன், உடலில் இரத்தமும் அதிகமாகும்.
- பீட்ரூட் கிழங்கை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால், புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
- கருப்பு உலர் திராட்சையை ஊற வைத்து தினந்தோறும் 4 எடுத்துக் கொள்ளலாம்.
- வாரத்திற்கு இரண்டு முறை பீர்க்கங்காய் சாப்பிடலாம்.
- தினந்தோறும் ஒரு நெல்லிக்காயை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறும்.
நோய் எதிர்ப்பு சக்தி
கொய்யாப் பழத்தில் புரதம், கொழுப்பு மற்றும் மாவுச் சத்துக்கள் குறைந்த அளவே இருந்தாலும், பொட்டாசியம், நார்ச்சத்து, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. 100 கிராம் கொய்யாவில் 210 மில்லி கிராம் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இரும்புச்சத்தை கிரகித்துக் கொள்ள வைட்டமின் சி மிகவும் அவசியமாகும். இதன் கலோரி அளவு 51. நார்ச்சத்து 5.2% உள்ளது. வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் சிறிதளவு உள்ளது. 100 கிராம் கொய்யாவில் 0.27 மில்லி கிராம் இரும்புச்சத்து நிறைந்திருப்பதால், கொய்யாப் பழத்தை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உடல் வலிமை பெறும்.
அன்றாடம் தொடர்ந்து காய்கறிகள் மற்றும் பழங்களை தவறாது சாப்பிடுவது, உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். இந்தப் பழக்கத்தை குழந்தைகளிடம் சிறு வயதிலேயே சொல்லிப் பழக்கப்படுத்துங்கள். அதுதான், பிற்காலத்தில் அவர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு நல்ல பலனைத் தர வல்லது.
மேலும் படிக்க
அரசுப் பணியாளர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு: மார்ச் மாதம் எதிர்பார்ப்பு!
Share your comments