1. வாழ்வும் நலமும்

எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள இந்த எண்ணெய்கள் உதவும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
These oils help keep bones strong!

பொதுவாக வயதாக வயதாக நம் எலும்புகளின் வலிமையும் குறைந்துகொண்டே வருகிறது. இது உடல் நலத்திற்கு நல்லதல்ல. எனவே எலும்புகளின் வலிமை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியதும் முக்கியம். மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில்லை.

அப்படி ஊட்டச்சத்துக்கள் கிடைக்காதபோது அல்லது நீங்கள் போதுமான உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது, எலும்புகள் வலு இழப்பதோடு, வலிகளும் ஏற்படத் தொடங்குகின்றன. இதுவே, இன்றைய இளைஞர்களும் இந்த நோயின் பிடியில் சிக்குவதற்கு மிக முக்கியக் காரணம்.

அந்த வகையில், எலும்பை வலுப்படுத்தும் குறிப்பிட்ட எண்ணெய்களை தொடர்ந்து பயன்படுத்தினால், எலும்புகள் வலுப்படுவதோடு, வலிகளில் இருந்தும் முழுமையாக நிவாரணம் கிடைக்கும்.

நல்லெண்ணெய்

எலும்புகள் வலுப்பெற, நல்லெண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். வலிகளுக்கு நிவாரணம் கிடைக்கும். இந்த எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடலும் சருமமும் மிகவும் அழகாக மாறும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ உள்ளது. இது புற ஊதா கதிர்களில் இருந்து சருமத்தைப் பாதுகாப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது, பாதாம் எண்ணெயைக் கொண்டு எலும்புகளை, மசாஜ் செய்யலாம்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய் எலும்புகளை வலுப்படுத்த மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உடலை வலுவாக்குவது மட்டுமின்றி, மூட்டு வலிக்கும் இந்த எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த எண்ணெயைக் கொண்டு உடலை மசாஜ் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு நிச்சயம் பலன் அடைவீர்கள். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கிறது.

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயும் மற்ற எண்ணெய்களைப் போலவே எலும்பை வலுப்படுத்தும். இதைப் பயன்படுத்துவதன் மூலம், உடல் வலியிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும். அதாவது, இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் உடலையும் மசாஜ் செய்யலாம். இதில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த நான்கு எண்ணெய்களையும் நீங்கள் கண்டிப்பாக முயற்சிக்கலாம். எலும்பு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, வலியில்லாமல் நிம்மதியாக இருக்க இன்றே எலும்புகளை வலுவாக்கும் முயற்சியைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க...

மாம்பழத்தில் போலி- கண்டுபிடிக்க என்ன செய்யவேண்டும்?

ஒல்லியான உடல் அமைப்புக்கு - இந்த பால் கைகொடுக்கும்!

English Summary: These oils help keep bones strong! Published on: 16 May 2022, 08:38 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.
News Hub