அதிகரித்து வரும் வெப்பம் காரணத்தால் மக்கள் அவதிபட்டு வருகின்றன. கத்திரி வெயில் முடிந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் குறைய வில்லை. கொளுத்தும் வெயிலில் உடலின் சீதோக்ஷண நிலை பெரும் பாதிப்படைந்து வருகிறது. உடல் சோர்வு, மயக்கம், அதிக தாகம், சரும பிரச்சனை, உடலில் அதிக வெப்பம், ஆகிய பிரச்சனைகள் பெருமளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன. எனவே உடலின் நீர் பற்றாக்குறையை போக்கி வெயிலில் சோர்வின்றி இருக்கு கீழ் குறிப்பிட்டுள்ள சில குறிப்புகளை மேற்கொள்ளுங்கள்.
வெப்பத்தில் இருந்து தப்பிக்க உதவும் சில குறிப்புகள்
அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக அதிக நேரம் வெயிலில் இருப்பதை தவிர்க்கவும். இதற்காக நீங்கள் சன் க்ரீம் பயன் படுத்தலாம். மேலும் குளிர் காலத்தை விட கோடை காலத்தில் உடலுக்கு நீர் 500 (மி/லி) அதிகம் தேவை படும்.
வெளியில் செலவதற்கு முன் உடல் மற்றும் முகத்தை முடிந்த வரை மறைத்து கொள்ளவும், மற்றும் காட்டன் துணியாக இருந்தால் மிகவும் நல்லது. மேலும் சன் க்ரீம், லோஷன், கண்ணாடி, ஆகியவற்றை உபயோக படுத்துவது சிறந்தது.
நீர் சத்து உள்ள உணவுகளை அதிகம் உட்கொள்ளவும். தர்பூசணி, எலும்பிச்சை சாறு, மோர், சர்பத், கேழ்வரகு கூழ், குளிர்ந்த நீர், ஆகியவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ளவும். இதனால் உடலில் வெப்பம் குறைந்து வெயிலில் நீர் பற்றாக்குறையை குறைக்க உதவும்.
உடலி அதிக வெப்பம் காண்பவர்கள் உடல் சூட்டை தணிக்க, ஒரு கரண்டியில் நல்லெண்ணையை அடுப்பில் காய வைத்து பின் அதில் 3, 4 மிளகு சேர்த்து, அத்துடன் 2 பல் வெள்ளை பூண்டு தோல் உரிக்காமல் எண்ணையில் சேர்க்கவும். எண்ணெய் ஆறிய பிறகு கால் கட்டை விரல்களில் தடவவும். 5 நிமிடத்திற்கு பிறகு காலை கழுவி விடவும். உடனடி தீர்வு கிடைக்கும். இந்த முறையை தினமும் செய்து வந்தால் உடல் வெப்பம் முழுமையாக குறைந்து விடும்.
k.sakthipriya
krishi jagran
Share your comments