1. வாழ்வும் நலமும்

ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க- இது ஒன்றே போதும்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
This alone is enough to control sugar levels!

40 வயதைத் தாண்டும்போது நம் மனதுக்குப் புத்துணர்ச்சி இருக்கிறதோ, இல்லையோ, Pressure, diabetics ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று நம்மை ஆட்கொண்டு விடுகிறது. எனவே அதில் இருந்து விடுபட, மருத்துவர் அளிக்கும் மாத்திரைகளுடன், சில இயற்கையான உணவுகளைக் கட்டாயம் எடுத்துக்கொண்டால் போதும்.

அந்த வகையில் சர்க்கரை எனப்படும் நீரழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்று சொன்னால் அதுதான் பிரியாணி இலை. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பிரியாணி இலை தூளின் ஒரு ஸ்பூன் அளவு போதுமானது.

எச்சரிக்கை

இந்தியன் ஹார்ட் அசோசியேஷன் கூற்றுப்படி, 2035 ஆம் ஆண்டில் இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 109 மில்லியனாக உயரும். மேலும், சராசரியாக, 40 வயதைக் கடக்கும் போது இந்த நோய் தாக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த நோய்க்கு உணவுமுறை ஒரு முக்கியமான பகுதியாகும். அனுதினமும், நம் உணவில் சேர்க்கக்கூடிய பல பொருட்கள் உள்ளன. அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதில் பிரியாணி இலை முக்கியமான ஒன்றாகும். இவை பல இந்திய உணவுகளில், சுவைக்காவும், மணத்திற்காகவும், ஊட்டச்சத்தை அளிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இது மலபார் இலை என்றும், அழைக்கப்படுகிறது.

பிரியாணி இலைகள் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி போன்ற தாதுக்கள் மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றால் பலப்படுத்தப்பட்டுள்ளது. இது பல சூப்கள், கறிகள் மற்றும் அரிசி உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மூலிகையில் செழுமையாக உள்ள ஊட்டச்சத்து, செரிமான பிரச்சனைகளைத் தடுப்பது, இதயத்தைப் பாதுகாப்பது மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவது போன்ற பல நன்மைகளை வழங்குகின்றன. அதிலும் நீரிழிவு நோயாளிகள் குறிப்பாக தங்கள் உணவுகளில் அதைச் சேர்ப்பதன் மூலம் பயனடையலாம், ஏனெனில் இது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

எப்படி உதவுகிறது?

மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட 2016 ஆம் ஆண்டு ஆய்வின் முடிவில், 30 நாட்களுக்கு 1 முதல் 3 கிராம் பிரியாணி இலைகளை உட்கொள்வது, டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்த உதவியது.இந்த இலைகளில் பல பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவு விளைவைக் கொண்டிருக்கிறது. பிரியாணி இலைகளை உட்கொள்வது இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாக கண்டறியப்பட்டது.

எப்படிப் பயன்படுத்துவது?

  • பிரியாணி இலைகளின் முழுப் பலனையும் பெற, நீரிழிவு நோயாளிகள் தங்கள் வழக்கமான மருந்துகளுடன் சேர்த்து, மற்ற ஆரோக்கியமான உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம்.

  • நீங்கள் பிரியாணி இலைகளை உங்கள் சூப்கள் மற்றும் கறிகளில் சேர்க்கலாம். அல்லது உலர்ந்த இலைகளை தூளாக அரைத்து உங்கள் உணவில் சேர்த்து, மூலிகையின் முழுப் பயனடையலாம்.

  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த பிரியாணி இலை தூளின் ஒரு ஸ்பூனே அளவு போதுமானது.

மேலும் படிக்க...

ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை- கல்வித்தகுதி பட்டப்படிப்பு!

பொதுத் தேர்விற்கு பாடத்திட்டங்கள் குறைப்பு- மாணவர்களுக்கு Happy news!

English Summary: This alone is enough to control sugar levels! Published on: 10 March 2022, 07:18 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.