பொதுமக்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே, ஒமிக்ரான் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறினார்.
விபரீதத்தை உணராதவர்கள்
தமிழகத்தில் கொரோனாத் தொற்றுப் பரவால் தடுக்க சுகாதாரத்துறை தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்தி வருகிறது. கடந்த 10 மாதங்களில் 6 கோடியே 83 லட்சத்து 62 ஆயிரத்து 802 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி போடாமல் அலட்சியமாக உள்ளனர். பின்விளைவுகளை எண்ணி இவர்களுக்கு அச்சமே இல்லை போலும். இந்த 1.25 கோடி பேர் முதல் தவணையும், 25 லட்சம் பேர் 2-வது தவணையும் போட வேண்டியுள்ளது.
அச்சத்தில் உலக நாடுகள் (The nations of the world in fear)
இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் விரைவாகச் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸ் 15க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மோசமான பாதிப்புகளை இந்த வைரஸ் உருவாக்கி வருவதால், வல்லரசான அமெரிக்கா முதல் அனைத்து நாடுகளும்ம ஆடிப்போய் உள்ளன. இது இந்தியாவில் இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் உஷார் நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ளது.
வேதனை (Pain)
இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கூறியதாவது:-
தடுப்பூசி போடாதவர்கள் கூடிய விரைவில் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் இன்னும் 1½ கோடி பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
போதுமான அளவு தடுப்பூசி இருப்பு உள்ளது. மெகா முகாம்கள் நடத்துவதற்கு பணியாளர் தயாராக இருக்கிறார்கள். இத்தனை இருந்தும் பொதுமக்களிடம் இன்னும் தடுப்பூசி போடுவதற்கு ஆர்வம் வரவில்லை.
தடுப்பூசியே ஆயுதம் (The vaccine is the weapon)
வீடுகளுக்கு அருகில் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீதி வீதியாக சென்று தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இவ்வளவு முயற்சி எடுத்தும் கூட இன்னும் சிலர் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டுகிறார்கள். தற்போது கொரோனா ஒமிக்ரான் வைரசாக உருமாறி பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளத் தடுப்பூசியே ஆயுதமாக விளங்குகிறது.
கட்டுப்பாடுகள் (Restrictions)
எனவே பொதுமக்கள் இனியும் காலம் தாழ்த்தாமல் உடனே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வரவேண்டும். இதன் மூலம் மட்டுமே ஒமிக்ரான் உயிரிழப்பைத் தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையே ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
புதிய வகை வைரஸ் பரவல்: கவனமாக இருங்கள்! அரசு அறிவுரை!
தடுப்பூசிக்கு கட்டுபடாத புதிய வகை வைரஸ் ''ஒமிக்ரான்'': உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!
Share your comments