1. வாழ்வும் நலமும்

அழகை என்றும் தக்கவைக்க- இவற்றுக்கு 'உ ஊ' சொல்லுங்க!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

அழகு என்பது பார்ப்பவர் மனதில் உள்ளது. இருப்பினும் இறைவன் படைப்பில் அனைவருமே அழகுதான். அந்த வகையில், அழகாகத் திகழ வேண்டும் என யாருக்குத் தான் ஆசை இருக்காது. ஆனால், நமது அன்றாட வாழ்வில், நமது சருமத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் உணவுகளை அதிக அளவில் உட்கொள்கிறோம். அத்தகைய உணவுகளைக் கண்டறிந்த, அவற்றை உட்கொள்வதை குறைத்துக் கொள்வது அவசியம். அப்படி நாம் ஒதுக்கிவைக்க வேண்டிய உணவுகள் எவை? இதோ அந்த பட்டியல் உங்களுக்காக!

காஃபி

உடலில் உள்ள காஃபின் அளவு உங்கள் சருமத்தை உலரச் செய்கிறது. அதனால், இளம் வயதிலேயே முதிய தோற்றம் வந்து விடும். இதைத் தவிர்க்க, இன்றே காஃபின் உள்ள காபியை அளவோடு பருகுவதைக் கடைப்பிடிப்போம்.

உப்பு

அதிகப்படியான உப்பு உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. படிப்படியாக தோல் பொலிவும் குறைகிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க அதிக உப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மது

எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மது அருந்துவது பயனளிக்காது. இதை உட்கொள்வதன் மூலம் ஏற்படும் நீரிழப்பு உங்கள் சருமத்தை பாதிக்கிறது.

கிளைசெமிக்

அதிக கிளைசெமிக் குறியீட்டைக் கொண்ட பொருட்கள் உங்கள் உடலுக்கு நிறைய தீங்கு விளைவிக்கும். அத்தகைய பொருட்களை சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை சமநிலையை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல் முகப்பரு பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. எனவே, சர்க்கரை, தேன் அல்லது வெல்லம் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

மாவுப் பொருட்கள்

எந்த வகையான மாவிலிருந்தும் தயாரிக்கப்படும் பொருட்களின் சுவை நன்றாக இருக்கும். ஆனால் இந்த உணவுகளை சாப்பிடுவதால் உங்கள் சருமத்திற்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக தீங்கு விளைவிக்கும். மைதா சாப்பிடுவது சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் ஆரோக்கியத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.

மேலும் படிக்க...

பெண்கள் இளம்வயதில் பூப்படைவதற்கு பிராய்லர் கோழி காரணமல்ல!

கெட்டக் கொழுப்பைக் கரைக்க வேண்டுமா? இது ஒன்றே போதும்!

English Summary: To retain beauty forever- say 'U U' to these! Published on: 29 March 2022, 08:51 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.