அன்றாட சமையலில் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருள் உப்பு. "உப்பில்லா பண்டம் குப்பையிலே" என்ற பழமொழியும் உப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. உணவில் உப்பின் அளவு குறைந்தாலும் பிரச்சனை தான்; அதிகமாக இருந்தாலும் பிரச்சனை தான். உணவில் மிதமிஞ்சிய உப்பு, உயிருக்கே ஆபத்தை விளைவிக்க கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். உணவின் சுவையை அதிகரிக்க உப்பு உதவுகிறது. அதோடு, அளவோடு சாப்பிட்டால் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இருப்பினும், உணவில் உப்பின் அளவானது அதிகரித்தால், அது பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும்
அதிக உப்பு தரும் அபாயம்
உடலில் உப்பின் அளவு அதிகரிக்கும் நேரத்தில், கால்சியத்தின் அளவு இயல்பாகவே குறையும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். அதிகளவு உப்பு கால்சியத்தை உறிஞ்சி விடுகிறது. இதன் காரணமாக எலும்புகள் வலுவிழந்து மூட்டு வலி மற்றும் ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்கள் தாக்கும் அபாயமும் உள்ளது.
சிறுநீரகப் பிரச்சனை
அதிக உப்பை உட்கொள்வதால், உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களின் ஆபத்துகள் அதிகரிக்கிறது. அதிகளவிலான உப்பு தான் சிறுநீரக பிரச்சனைகள் ஏற்பட மிக முக்கிய காரணமாகும்.
அதிக உப்பை உட்கொள்வதனால், உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி விடும். இதனால், சிறுநீரகப் பிரச்சனைகள் உண்டாகும். உப்பில் உள்ள இரசாயன பொருட்கள் உடலில் நீர்ச்சத்து மற்றும் இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயத்தின் செயல்பாடு சீராக இருக்கவும் மிகவும் அத்தியாவசியமானது. ஆனாலும், உப்பின் அளவானது அதிகரித்தால், இரத்த ஓட்டத்தின் வேகமும் அதிகரிக்கிறது.
உடல் பருமன்
உணவில் அதிக உப்பை சேர்ப்பது கலோரிகளை அதிகரிப்பது மட்டுமின்றி, உடல் பருமனையும் அதிகரிக்கிறது. மேலும் இது உடல் கொழுப்பையும் அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக எடுத்துக் கொண்டால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம்.
உப்பின் அளவு
ஆரோக்கியமாக இருக்கும் ஒரு மனிதனுக்கு தினந்தோறும் 2.3 கிராம் அளவு உப்பு போதுமானது என் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தினசரி 5 கிராமுக்கு மேல் உப்பைப் பயன்படுத்தக் கூடாது என்றும் எச்சரிக்கின்றனர். ஆனால் நோயாளிகள் மற்றும் உடல் நலப் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசித்து உப்பின் அளவை முடிவு செய்ய வேண்டும்.
குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டியவை
உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்திற்கு சிறந்தது. உப்பு அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிடவே வேண்டாம். ஊறுகாய் மற்றும் வத்தல் போன்ற அதிக உப்பு உள்ள உணவுகளை சிறிது குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். உணவில் குறைவான உப்பை சேர்த்துக் கொள்வதை, தினமும் பழக்கிக் கொண்டால் நீண்ட நாட்கள் உடல் நலத்துடன் வாழலாம்.
மேலும் படிக்க
நரைமுடியை கருப்பாக மாற்ற வெந்தயத்தை எப்படி சாப்பிட வேண்டும்?
இந்தப் பழங்களை இரவில் சாப்பிடக் கூடாது: தெரியுமா உங்களுக்கு?
Share your comments