1. வாழ்வும் நலமும்

தோலுக்கும் இந்த 9 காய்கறிக்கும் ஒரு பந்தம் இருக்கு- தெரிஞ்சுக்கலாம் வாங்க!

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Top 9 Skin-Friendly Veggies list here

நமது உணவில் காய்கறிகளை சரிசமமாக சேர்ப்பது ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கும். தோலின் நன்மைக்கு பெரிதும் உதவும் ஒரு 9 வகையான காய்கறிகளையும், அவற்றில் இருக்கும் ஆரோக்கிய தன்மைகளையும் இப்பகுதியில் காணலாம்.

கீரை:

கீரையினை நமது அன்றாட தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கீரையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. இவை, ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுவதன் மூலம் ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கேரட்:

பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது, இது சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும், தோலின் ஈரப்பத வறட்சியைத் தடுக்கவும் உதவுகிறது. கேரட் போன்றவற்றை வெறுமனே கூட உண்ண இயலும் என்பதால் தோல் சருமத்தின் பராமரிப்புக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

இனிப்பு உருளைக்கிழங்கு:

பீட்டா கரோட்டின் நிறைந்த மற்றொரு சிறந்த ஆதாரமான இனிப்பு உருளைக்கிழங்கு சரும அமைப்பை மேம்படுத்தவும், சருமத்தின் ஆரோக்கியமான பளபளப்பைக் கொடுக்கவும் உதவும்.

குடை மிளகாய்:

வைட்டமின் சி நிரம்பிய மிளகுத்தூள் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது மற்றும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

தக்காளி:

தக்காளியில் அதிகளவிலான நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் லைகோபீன் அதிகம் உள்ள தக்காளி சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலி ஊட்டச்சத்து மிகுதியாக காணப்படும் காய்கறிகளில் ஒன்று. ப்ரோக்கோலியில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ உள்ளது, அத்துடன் ஒட்டுமொத்த சரும ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஆக்ஸிஜனேற்றங்களும் இவற்றில் உள்ளன.

அவகேடோ:

ஆரோக்கியமான கொழுப்புகள், வைட்டமின்கள் ஈ மற்றும் சி, மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த அவகேடா பழங்கள் சருமத்திற்கு ஊட்டமளித்து, ஈரப்பதமாக்கி, இயற்கையான பளபளப்பை அளிக்கின்றன.

வெள்ளரிகள்:

தோலின் பளபளப்புக்கு உதவும் காய்கறிகளின் பட்டியலில் வெள்ளரி இல்லாமல் எப்படி? தக்காளியினை போன்று அதிக நீர்ச்சத்து நிறைந்துள்ள வெள்ளரிகள் சருமத்தை நீரேற்றமாக வைப்பதுடன் தோலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் கொண்டது.

பீட்ரூட்:

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி ஆகியவற்றின் நல்ல ஆதாரமாக திகழ்வது பீட்ரூட். இது ஆரோக்கியமான சருமம் மற்றும் தோலின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேற்குறிப்பிட்ட காய்கறிகளை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதே நேரத்தில், வழக்கமான உடற்பயிற்சி, வெப்பநிலைக்கு ஏற்றவாறு நீர் அருந்துதல் மற்றும் சீரான உணவு உட்பட ஒட்டுமொத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பதும் முக்கியம் என்பதை நினைவில் கொள்க.

மேலும் காண்க:

காய்கறி கழுவ எது பெஸ்ட்- பேக்கிங்க் சோடா? வினிகர்?

English Summary: Top 9 Skin-Friendly Veggies list here Published on: 20 June 2023, 04:25 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.