மனித உயிர் மகத்துவம் நிறைந்தது. விலைமதிப்பில்லாத அந்த உயிரைக் காப்பாற்றா மருத்துவர்கள் கடுமையாகப் போராடினாலும், சில வேளைகளில் இயற்கையே ஜெயித்துவிடுகிறது. இது ஒருபுறம் என்றால், ஓரறிவு, ஈரறிவு என ஐந்தறிவு ஜீவராசிகள் வரை சாப்பிட்டுக்கொண்டிருந்த மனிதர்கள் தற்போது, சக மனித இறைச்சியையும் ருசிக்கத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில்,மனித பிணங்களை சுடச்சுடச் சுட்டு சாப்பிடும் பழக்கம் பிரேசில் நாட்டில் வாழும் ஆதி வாசி மக்களிடம் உள்ளது. இதில் சூட்சமம் என்னவென்றால், அழுதுகொண்டே ரசித்து சுவைத்து சாப்பிடுவதுதான். பிரேசில் நாட்டில் யாரோமாமி என்ற ஆதி வாசி மக்கள் காட்டில் வசிக்கின்றனர்.
ருசிக்கும் உறவினர்கள்
இவர்கள் வெளி உலகத்துடன் தொடர்பே இல்லாமல் இருப்பதுடன், இன்றளவும் நாகரீகம் அடையாமல் ஆதி வாசி மக்களாகவே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்களிடம் ஒரு வித்தியாசமான பழக்கம் ஒன்று உள்ளது. இந்த ஆதி வாசி மக்கள் கூட்டத்தில் யாராவது இறந்துவிட்டால், இறந்தவரின் குடும்பத்தினர் இறந்தவரின் உடலைத் தீயில் சுட்டு அவரது பிணத்தை சாப்பிடுகிறார்கள்.
கூட்டமாக அந்த பிணத்தைச் சுற்றி அமர்ந்து அவர்கள் சாப்பிடும் போது இறந்தவர்களுக்காக பாடல் பாடிக்கொண்டே அழுதுகொண்டே ரசித்து சுவைத்து சாப்பிடுவார்களாம். அப்படியாகச் சாப்பிடுவது இறந்தவர்களுக்கு அவர்கள் செய்யும் மரியாதையாக அந்த மக்கள் பார்க்கின்றனர்.
அடடே இப்படியும் ஒரு பழக்கமா?
மேலும் படிக்க...
கட்டிப்பிடி வைத்தியம்- உடல் ஆரோக்கியத்திற்கு அதிகப்பலன் தரும்!
வாட்டும் வெயிலிலும் உடலைக் குளுகுளுவென வைத்துக்கொள்ள வேண்டுமா?
Share your comments