1. வாழ்வும் நலமும்

இன்னும் எத்தனை நாட்களுக்கு சாதாரண டீ, காபி: புதிதாக முயற்சிப்போமே

KJ Staff
KJ Staff
Tea Coffee

என்னால லா காபி, டீ குடிக்காம இருக்கவே முடியாது... பைத்தியமே புடிச்சுடு.... என்று நம்மில் எத்தனை பேர் இந்த காபிக்கும், டீயிற்கும் அடிமை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது இந்த டீ அல்லது காபி குடிச்சே ஆக வேண்டும், இல்லை என்றால் நாள் சரியாக செல்லாது என்று சொல்பவர்கள் பலர் உண்டு.

ஆனால் அதையே தொடர்ந்து குடித்து வருவது உடலுக்கு மிகவும் தீங்கு என்று பலரும் கூறி கேட்டிருப்போம் மேலும் இது ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டுள்ளது. எனவே இன்னும் எத்தனை நாட்களுக்கு சாதாரண டீ, காபியையே குடிப்போம். புதிய முயற்சியாக நாம் சில மூலிகை பானங்களை எடுத்து கொள்ளவது ஒரு புதிய மாற்றமாகவும் இருக்கும், உடல் ஆரோக்கியத்தை காக்கவும் உதவும். எளிதில் கிடைக்கும் உணவு பொருட்களை கொண்டு அருமையான மற்றும் சுவையான மூலிகை தேநீர் அல்லது காபி செய்து சுவைக்கலாம்.

Dates Seed Tea

பேரிச்சை விதை

தேநீர் சுவைக்கு இணையான எளிய செய்முறை கொண்ட பேரிச்சை விதை டீயில் தாமிரம், செலினியம், இரும்பு சத்து உள்ளிட்ட தாது உப்புகள் நிறைந்துள்ளன. பேரிச்சை விதையை நன்கு வறுத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதனை ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி என்ற அளவில் சேர்த்து கொண்டு கொதிக்க விட்டு பின்பு வடி கட்டி, பால், பனங்கற்கண்டு சேர்த்து வாரம் ஒரு முறை குடிக்கலாம்.

நன்மைகள்

இதனால் ரத்த சோகை, தோல் பிரச்சனைகள், நியாபக மறதி ஆகியவை சரியாகும்.

Karpuravalli Leaf

கற்பூரவல்லி இலை

தேயிலையுடன் கற்பூரவல்லி இலை பொடியை சேர்த்து கொதிக்க வைத்து பின்பு வடி கட்டி அதனுடன் தேன் சேர்த்தால் சுவையான கற்பூரவல்லி தேநீர் தையார். 

நன்மைகள்

கற்பூரவல்லியில் வைட்டமின் "சி", இரும்பு சத்து, ஒமேகா 3, நார்சத்து, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனை பருகி வந்தால் செரிமானக கோளாறு, சிறுநீரக தொற்று, ஆகியவை நீங்கும் மற்றும் புற்றுநோயையும் தடுக்கும்.

Jaggerry tea

கருப்பட்டி காபி

வெள்ளை சர்க்கரையை சேர்த்த காபியை விட கருப்பட்டி சேர்த்த காபிக்கு தனி சுவை உண்டு. இந்த கருப்பட்டி காபியில் உடலுக்கு வலுவூட்டும் கேல்சியம், துத்தநாகம், இரும்பு சத்து ஆகியவை நிறைந்துள்ளன. எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலுவை தருகின்றன. இந்த காபி செய்ய முதலில் கருப்பட்டியை கரைத்து வடி கட்டி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் காபி தூளை கொதிக்கும் நீரில் போட்டு வடி கட்டிய பிறகு கருப்பட்டியை சேர்த்தால் கருப்பட்டி காபி தையார்.  

Lotus

தாமரை பூ

காம்பு நீக்கிய தாமரை பூவை இரண்டு குவளை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். கொதி வரும் போது அதனுடன் சிறிது மிளகு, ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றின் பொடிகளை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு பின்பு வடி கட்டி பால் பனங்கற்கண்டு சேர்த்தால் மணம்மிக்க தாமரை பூ காபி தையார்.

நன்மைகள்

இதில் அமினோ அமிலங்கள், பாலிபெனோல்ஸ், க்ளைக்கோசைட்ஸ் ஆகியவை உள்ளன. ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள இந்த காபி புற்றுநோய் வராமல் தடுக்கிறது. ரத்த அழுத்தம், மாதவிடாய் உள்ளிட்ட பிரச்சனைகளை சீராக்குகிறது.

orange

ஆரஞ்சு தோல்

ஆரஞ்சு தோலின் வெள்ளை பகுதியை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி இரண்டு குவளை நீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் தட்டிய ஏலக்காய் சேர்க்க வேண்டும். பாதியாக சுண்டிய பிறகு எடுத்து வடி கட்டி தேன் சேர்த்து குடிக்கலாம்.

நன்மைகள்

இதில் வைட்டமின் "சி", ஆன்டி ஆக்ஸிடன்ட், பிளவனோய்ட்ஸ், ஆகியவை நிறைந்திருக்கின்றான. இதனால் ஏற்படும் நன்மை, தோல் பிரச்சனை நீங்கி தோல் பொலிவு பெரும்.

இவ்வாறு எளிய முறையில் வீட்டிலேயே கிடைக்கும் உணவுப் பொருட்களை கொண்டு உடலுக்கு நன்மை அளிக்கும் பானங்களை தயார் செய்து சுவைத்து உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளலாம்.     

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Try something New! How Many More Days Normal Tea, Coffee, Try These Awesome Herbal Drinks at your Home

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.