மஞ்சள் மற்றும் தயிரை சேர்த்து பயன்படுத்துவது, உங்கள் சருமத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மஞ்சளில் கிருமி நாசினிகள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் முதுமை தோற்றத்தை நீக்கும் பண்புகள் உள்ளன.
மறுபுறம், துத்தநாகம், கால்சியம், வைட்டமின் பி மற்றும் லாக்டிக் அமிலம் தயிரில் காணப்படுவது குறிப்பிடதக்கது. இந்த இரண்டு பொருட்களும் இணையும் போது சருமம் தொடர்பான பல பிரச்சனைகள் நீங்கி, முகத்திற்கு புது பொலிவை தருகிறது.
சருமத்தில் பொலிவு பெற (To get radiance on the skin)
தயிர், மஞ்சள், கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் ஆகியவற்றைக் கலந்து பேஸ்ட்டாக தயாரித்து, முகத்தில் தடவி 10 நிமிடங்கள் வைக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் முகத்தில் பொலிவு ஏற்படும். இதில் இருக்கும் துத்தநாகம், கால்சியம், வைட்டமின் பி சருமத்தின் பொலிவை பாதுகாக்க உதவுகிறது.
இவ்வாறு செய்வதினால் ஏற்படும் நன்மைகள் (The benefits of doing so)
தயிர் மற்றும் மஞ்சளைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளையும் பெரிதும் குறைக்கலாம். மஞ்சள் மற்றும் தயிரில் முதுமை தோற்றத்தை போக்கும் தன்மை உள்ளது. மறுபுறம், மஞ்சளில் காணப்படும் குர்குமின் சுருக்கங்களை நீக்குகிறது. தயிரில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் துத்தநாகம் சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்க வல்லது.
ஒரு டீஸ்பூன் மஞ்சள், ஒரு டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் கலந்து பேஸ்ட்டாக கலந்து முகத்தில் தடவவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்திற்கு பொலிவை தரும். சோற்று கற்றாழையாக இருப்பின் கூடுதல் நன்மை பெறலாம்.
எண்ணெய் பசை நீங்கும் (Do this for oily skin)
வெயில் காலம் தொடங்கும் நிலையில், நம் சருமத்தில் அதிகம் எதிர்கொள்ளும் பிரச்சனை எண்ணெய் பசை தான். இந்த சரும பிரச்சனைக்கு முட்டையின் வெள்ளைக்கருவை தயிர் மற்றும் மஞ்சளுடன் கலந்து தடவவும். இது முகப்பரு மற்றும் எண்ணெய் சரும பிரச்சனையை நீக்க வல்லது. இந்த பேக்கை தயாரித்த பிறகு, முகத்தில் 10 நிமிடங்கள் ஊற வைத்தல் அவசியம். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். முட்டையில் புரதம் உள்ளது, இது சருமத்திற்கு நன்மை பயக்கும்.
கரும்புள்ளிகள் பிரச்சனை இவ்வாறு செய்யுங்கள் (Do this for the problem of blackheads)
மஞ்சள், தயிர் மற்றும் ரோஸ் வாட்டர் கலவையில் சந்தனப் பொடியைக் கலக்கவும். இப்போது இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். ஃபேஸ் பேக் காய்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவவும். மஞ்சளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இருக்கின்றன. இது முழுவதுமாக குணமடையும் என்று குறிப்பிட இயலாது.
கருமையை நீக்கும் (Eliminates darkening)
ஒரு கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் மஞ்சள், ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சில துளிகள் ரோஸ் வாட்டர் கலக்கவும். பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு சாதாரண நீரில் முகத்தை கழுவவும். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவதற்கு முன், பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பது அவசியம். ஏனேன்றால், ஒவ்வாமை இருப்பின் அது இதில் தெரிய வந்துவிடும். புதிதாக வரும் சரும பிரச்சனையை தவிர்த்திடலாம்.
மேலும் படிக்க:
SEBI ஆட்சேர்ப்பு 2022: ரூ. 1.15 லட்சம் வரை சம்பளம் பெற பொன்னான வாய்ப்பு
Share your comments