1. வாழ்வும் நலமும்

பால் பாக்கெட் கவர்களை இனிமே குப்பையில் போடாம இப்படி பயன்படுத்துங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan
Milk pocket covers

முன்பெல்லாம் வீடுகளில் பால்பாக்கெட் கவர்களை சேகரித்து எடைக்குப் போடுவார்கள். ஆனால் தற்போது அந்த பழக்கம் பல வீடுகளில் குறைந்துவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் அவை சுற்றுசூழலுக்கு கேடு தராமல் மறுசுழற்சி (Recycle) செய்யும் விதமாகவே தயாரிக்கப்படுகிறது. மீண்டும் பால் பாக்கெட் கவர்களை சேகரிக்கும் பழக்கத்தை பின்பற்றினால் இந்த விஷயங்களுக்கெல்லம் பயன்படுத்தலாம். அவை என்னென்ன தெரிந்துகொள்ளலாம்.

பயன்கள்

பால் பாக்கெட் கவரை பாலை (Milk pocket covers) ஊற்றி பயன்படுத்திய பின் அவற்றை சுடுதண்ணீரில் அலசி காய வைத்து மடித்து வைத்துக்கொள்ளுங்கள். இதனால் வாசனை வராது.

பால் பேக்கிங் கவர்கள் தடிமனான தரத்திலே தயாரிக்கப்படுகிறது. எனவே அதில் உணவுப் பொருட்களை சேகரிக்கலாம். ஃபிரிட்ஜில் உணவுப் பொருட்களை சேகரித்து வைக்கலாம்.

பட்டாணி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, துருவிய தேங்காய் போன்ற காய்கறிகளையும் போட்டு வைக்கலாம்.

அவை உறையும் பதத்திலும் தாங்கும் என்பதால் உறைய வைக்க வேண்டிய உணவுப் பொருட்களையும் ஊற்றி வைக்கலாம். வைக்கும்போது இறுக மூடி வைக்க வேண்டும்.

தோட்ட வேலைகள், தூசி நிறைந்த வீட்டு வேலைகள் செய்யும்போது கையுறைகள் இல்லையெனில் இதை கைகளில் மாட்டிக்கொண்டு வேலை செய்யலாம்.

குழந்தை வைத்திருப்போருக்கு அவசரத்திற்கு இது உதவலாம். அதாவது வெளியே செல்லும்போது குழந்தையின் டையப்பர், டிஷ்யூ, துணிகளை பயன்படுத்திய பின் தூக்கி எறிய இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம். பெண்களும் நாப்கின்களை தூக்கி எறிய பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டில் நாய் வளர்போர் அதன் இயற்கை உபாதைகளை அகற்ற இந்த கவரைப் பயன்படுத்தலாம்.

இந்த பால் கவர்கள் தண்ணீர் நுழையாத வாட்டர் ப்ரூஃப் (Water Proof) என்பதால் சிறு எலக்ட்ரானிக் பொருட்கள், செல்ஃபோன், ஹெட் செட் என தண்ணீரில் நனையாமல் இருக்க பயன்படுத்தலாம்.

பால்பாக்கெட் கவர்களை பந்துபோல் உருட்டி தேவையற்ற ஓட்டைகளை அடைக்கலாம். சமையலின் போது தட்டை, வடை தட்ட பயன்படுத்தலாம். முருக்கு மாவை கவரில் ஊற்றி முருக்குப் பிழிய பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க

உயர உயர வளரும் மூங்கிலின் மருத்துவ பண்புகள்!
குளிர்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க எந்தெந்த உணவுகளை சாப்பிடலாம்!

English Summary: Use milk pocket covers like this so you don't have to throw them in the trash anymore! Published on: 03 November 2021, 08:58 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.