1. வாழ்வும் நலமும்

வெந்தயத்தின் பயன்கள்

KJ Staff
KJ Staff

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்டிரால் என்பது நமது மக்களிடையே காணப்படும் சில பொதுவான நோய்களாகும். இப்படி இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவு அதிகரிப்பதின் விளைவாக மற்ற உடல்நல குறைபாடுகள் ஏற்படுகின்றன. ஐதராபாத்திலுள்ள தேசிய ஊட்டச்சத்து மையத்தின் ஆய்வுகள் படி, வெந்தயம், இரத்தத்திலுள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் குறைக்கின்றன என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளுடன், வெந்தயம் உட்கொள்வது, உறுதுணையாய் செயல்படுகிறது.

 

வெந்தயத்தை  உபயோகிக்கும் முறைகள்:

  • வெந்தயம் என்பது பொதுவாக உணவின் ருசியினை அதிகரிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் பொருளாகும். இது மளிகை கடைகளில் கிடைக்கும்
  • வெந்தயம் அதிக நார் சத்து (50 சதவிதம்) கொண்டவை. இவை சர்க்கரை நோயாளிகளின் இரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையையும், இரத்தத்திலுள்ள அதிக கொலஸ்ட்ராலையும் குறைக்கின்றது. இத்தன்மையானது சமைத்த மற்றும் சமைக்காத வெந்தயத்தில் உள்ளது
  • வெந்தயக்கீரையில் மேற்கண்ட நோய் குறைக்கும் தன்மைகள் காணப்படவில்லை.
  • உட்கொள்ள வேண்டிய வெந்தயத்தின் அளவு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை மற்றும் கொலஸ்டிராலின் அளவைப் பொறுத்தது 25 கிராம் முதல் 50 கிராம் வரை வேறுபடுகிறது.
  • ஆரம்பக்காலத்தில், 25 கிராம் வெந்தயத்தை தினமும் இரண்டு வேலை, ஒரு வேலைக்கு 12.5 கிராம் (தோராயமாக இரண்டு தேக்கரண்டி) என்ற அளவில், இரண்டு முக்கிய உணவுகளாகிய காலை மற்றும் இரவு உணவுகளோடு எடுத்தும் கொள்ளலாம்.
  • வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊரவைத்தோ அல்லது பொடியாக இடித்து தண்ணீரிலும் மற்றும் மோரிலும் கலந்தோ உணவிற்கு 15 நிமிடங்கள் முன்னதாக எடுத்தக் கொள்ள வேண்டும்.
  • இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட விதைகள் அல்லது பொடியாக இடித்தெடுக்கப்பட்ட விதைகளை, தோசை, சப்பாத்தி, இட்லி, பொங்கல், உப்புமா, தயிர், பருப்பு மற்றும் காய்கறி கூட்டுகள் செய்யும் போது அவற்றுடன் இணைந்து பயன்படுத்தலாம். இப்படி செய்யும்போது விதைகளின் கசப்புத்தன்மை ஓரளவிற்கு குறைகிறது. இவைகளை தயார் செய்யும்போது உண்பவரின் ருசிப்புத்தன்மைக்கேற்ப உப்பையோ அல்லது புளியையோ சேர்த்து தயார் செய்யலாம்.
  • இரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அதிகளவு இருக்கும்வரை இவ்விதைகளை உட்கொள்ளலாம்.
  • வெந்தயம் எடுத்துக்கொள்வதுடன் தினமும் நடைபயிற்ச்சி போன்ற உடற்பயிற்சிகளை செய்வதும் மிகவும் அவசியம். உடல் எடையை குறைப்பதின் மூலம், இன்சுலின் ஹார்மோனின் செயல்களை அதிகரிக்க செய்யும். எனவே அதிக கேலாரிஸ் கொடுக்கக்கூடிய குறிப்பாக சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ள உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
  • வெந்தயத்தை உணவாக பயன்படுத்துவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மற்ற சர்க்கரை நோய் சிகிச்சை முறைகளையும் பின்பற்ற வேண்டும். இப்படி பயன்படுத்தும்போது சர்க்கரை வியாதிக்கான மருந்துகளின் அளவு குறையலாம். ஆகிலும் உங்கள் மருத்துவர் மாத்திரமே நோயின் தன்மையை கொண்டு எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்தின் அளவுகளை தீர்மானிக்க முடியும். சர்க்கரை நோயினால் திடீரென ஏற்படும் உடல் நலக் கேடுகளுக்கு உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாடுவது அவசியம்.
English Summary: Uses of Fenugreek Published on: 13 October 2018, 06:36 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.